tamilnadu

img

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு!

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு!

திருவனந்தபுரம், ஜூலை 15 - ஏமன் நாட்டில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த செவி லியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றத்திற்கு சில மணிநேரங்கள் மட்டுமே இருந்த நிலையில் இந்த ஆறுதலளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஹவுதி பிரிவின் கீழ் இயங்கும் ஏமன் குடியரசின் நீதித்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை (ஜூலை 16)  திட்டமிடப்பட்டிருந்த நிமிஷா பிரியா வுக்கான மரண தண்டனை நிறை வேற்றத்தை நிறுத்தி வைக்க அட்ட ர்னி ஜெனரல் முடிவெடுத்திருப்ப தாகவும், நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை மறு  அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கேரளத்தைச் சேர்ந்த 38 வயது செவிலியரான நிமிஷா பிரியா, ஏமன் தலைநகர் சனாவில் அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மஹதியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கி, நடத்தி வந்தார். ஆனால், நிமிஷாவின் வரு மானம், நகைகள், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு, மஹதி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2017-ஆம் ஆண்டு ஜூலை 25-இல் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தார். மஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, நிமிஷாவுக்கு வரும் புதன்கிழமை (ஜூலை 16) மரண  தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. நிமிஷா பிரியாவின் விடுதலை யில் ஒன்றும் செய்ய இயலாது என்று இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், நிமிஷா பிரியாவின் விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, கேரள முத லமைச்சர் பினராயி விஜயன் கடி தம் எழுதியிருந்தார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடி தம் எழுதிய பிறகு, பிரதமருக்கும் பின ராயி விஜயன் கடிதம் எழுதினார். அத்துடன், நிமிஷா பிரியாவின்  விடுதலைக்கான பணிகளை முன் னெடுக்கும் தன்னார்வலர்களுக்கு மாநில அரசின் அனைத்து ஆதரவை யும் வழங்கும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதியளித்தார். இதனிடையே, ஏமன் நாட்டு  சட்டவிதிகளின்படி, பாதிக்கப்பட்ட வரின் குடும்பத்தினர் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிர்க்க முடி யும் என்பதால், நிமிஷாவின் குடும்பத்தினர் மற்றும் மக்கள் சேர்ந்து ரூ. 8.60 கோடி வரை (சுமார்  10 லட்சம் டாலர்) திரட்டி இழப்பீடாக வழங்க முயற்சி மேற்கொண்டனர். நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற, கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்த புரம் ஏ.பி. அபுபக்கர் அகமது முயற்சி களில் ஈடுபட்டார். இந்திய சன்னி முஸ்லிம்களின் தலைவரான அபுபக்கர், மஹதியின் குடும்பத்தின ருடன் தொடர்பில் உள்ள ஏமன் மத குருமார்களிடம் இழப்பீட்டை ஏற்றுக் கொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். செவ்வாயன்றும் காலை 10 மணிக்கு மஹதியின் குடும்பத்தின ருடனான பேச்சுவார்த்தை துவங்கி யது. சூபி அறிஞர் ஷேக் ஹபீப் உமர், ஏமன் அரசாங்கத்தின் பிரதிநிதி, உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் கொலை செய்யப்பட்ட ஏமன் குடிமகன் தலாலின் சகோதரர் ஆகியோர் விவாதங்களில் பங்கேற்றனர். மஹதியின் குடும்பத்தினருடன் ஏற்கெனவே 4 கட்ட விவாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், மரண தண்டனைக்கு முந்தைய நாளில் நடைபெற்ற இந்தப் பேச்சு வார்த்தை மிகவும் முக்கியத்துவம் பெற்றது.  இந்தப் பின்னணியிலேயே, மரண தண்டனை நிறுத்திவைக்கப் பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.