கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு பட்டா கேட்டு காத்திருப்புப் போராட்டம்! முதல்வர் வருகைக்கு முன் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
கள்ளக்குறிச்சி, டிச. 18 - கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடி மக்களின் அனு பவ நிலங்களை காப்புக்காடுகளாக மாற்றம் செய்வதை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை (டிச. 18) அன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கல்வராயன் மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களை காப்புக்காடுகளாக மாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும், 2006 வன உரிமைச் சட்டத்தின்படி 2013, 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு களில் அளிக்கப்பட்ட 7,103 மனுக் களுக்கு முழுமையாகப் பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங் கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சி யாகவே, வியாழனன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கல்வராயன்மலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்ற தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வட்டாட்சியர்களின் உறுதிமொழி இதனிடையே, போராட்டம் நடை பெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு கல்வராயன் மலை தனி வட்டாட்சி யர் கமலக்கண்ணன் மற்றும் வட்டா ட்சியர் கோவிந்தராஜ் ஆகிய இரு வரும் வந்து மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் போராட்டக் குழு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வருகை தர உள்ளார். அப்பொழுது கல்வராயன் மலை பகுதி மக்க ளுக்கு 5000 பட்டாக்கள் தயார் நிலையில் உள்ளது, முதலமைச்சர் கைகளால் வழங்க உள்ளார் என்ப தனை அவர்கள் தெரிவித்தனர். தற்போது போராட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மனுக்களையும் பரிசீலனை செய்து உடனடியாக பட்டாக்கள் வழங்குவதாகவும், அனுபவ நிலத்தை காப்புக் காடாக மாற்றி ஆணை வெளியிட்டதை பரிசீலனை செய்து ரத்து செய்வ தற்கு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்து ரை செய்யப்படும் என்றும் அவர்கள் உறுதிமொழி அளித்தனர். இந்த உறுதிமொழியின் அடிப்படையில் காத்திருப்பு போராட்டம் வெற்றிகர மாக முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. ஏழுமலை, மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் எஸ். அண்ணா மலை, ஏ. செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த. ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் வி.அண்ணாமலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் வே.ஏழுமலை, சிபிஎம் வட்டச் செய லாளர் வி. ஏழுமலை, சங்காரபுரம் ஒன்றியச் செயலாளர் சிவாஜி ஆகி யோர் கலந்து கொண்டனர். கல்வரா யன் மலை மலைவாழ் மக்கள் சங்கத் தின் பொருளாளர் ஏ. இராமன், துணைத் தலைவர் டி. வெள்ளை யன், துணைச் செயலாளர் எஸ்.லட்சு மணன், எஸ். ஆண்டி, பி. சடையன், டி. தங்கராஜ், சுந்தரணபதி, தீர்த்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
