tamilnadu

img

தஞ்சமடைந்த 40 பேரை கொன்று குவித்த இஸ்ரேல்

காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள் பெரும் எண்ணிக்கையில் மவாசி கடற் கரையோரப் பகுதிக்கு இடம்பெயர்ந் திருந்தனர்.  இவ்வாறு தஞ்சம் புகுந்திருந்த வர்கள் மீது தான், இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தி, 40 உயிர்களைப் பறித்துள் ளது. இதனை பாலஸ்தீனத்தின் வாபா  செய்தி ஊடகம் உறுதிப்படுத்தி யுள்ளது. 32 அடிக்கு ஏற்பட்ட பள்ளம் தாக்குதல் தொடர்பான புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளி யாகியுள்ளன. இஸ்ரேலின் குண்டு வீச்சால் 32 அடி ஆழத்திற்கு பெரும் பள்ளங்கள் உருவாகியிருப்பதும், மக்களின் கூடாரங்கள், உடைமைகள் அழிக்கப்பட்டிருப்பதும் இந்த புகைப்படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும்  பணிகள் நடந்து வருகின்றன. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்களும் எழுந்துள்ளன. இஸ்ரேலின் ஆணவம் ஆனால், மனிதாபிமான பகுதி என்றா லும் அங்கிருந்து ஹமாஸ் கமாண்டோக் கள் இயக்குவது, வான்வழி  கண்காணிப்பில் உறுதிப்படுத்தப் பட்டதன் காரணமாகவே- துல்லியமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினோம் என்று தங்களின் கொலை வெறியை இஸ்ரேல் நியாயப்படுத்தி யுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம்  தேதி காசா மீது போரைத் துவங்கிய  இஸ்ரேல், இதுவரை, 40 ஆயிரத்து 972 பேர்களைக் கொன்று குவித்துள் ளது. 94 ஆயிரத்து 761  பேர்  காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட வர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவர்.  22 லட்சம் பேருக்கு உணவில்லை காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 11 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு ‘அவசர’ உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் (WFP- The World Food Programme) அமைப்பு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.