tamilnadu

img

3000 பேர் படுகாயம் : குழந்தைகள் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் பலி

பெய்ரூட்,செப்.18- லெபனானில் 3000க்கும் அதிகமான பேஜர் கருவிகளில் பொருத்தப்பட்டிருந்த வெடி மருந்துகளை வெடிக்க செய்ததில்  8 வயது குழந்தை உட்பட 10 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 3000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அதில் 200 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம்  தெரி வித்துள்ளது.  இந்த தாக்குதலில் லெபனானுக்கான ஈரான் தூதரும் படுகாயமடைந்துள்ளார்.  இது இஸ்ரேலின் பயங்கரவாதச் செயல் என லெபனான் குற்றம்சாட்டியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் உட்பட லெபனானில் பலர் பேஜர் கருவிகளை தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்து வது வழக்கம். ஆண்ட்ராய்டு உள்ளிட்ட நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை விட பேஜரின் லொகேஷனை கண்டறிவது மிக மிக கடினம். மேலும் அதனை டிராக் செய்யவும் இயலாது.  இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை கொலை செய்ய இந்த  தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படு கிறது. ஆனால் இந்த தாக்குதலின்  முடிவில்  குழந்தைகளும் அப்பாவி பொதுமக்களும் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.  

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல நகரங்களில் ஒரே நேரத்தில்  இந்த தீவிரவாதத்  தாக்குதல் நடந்துள் ளது. பேஜர் கருவியின் பேட்டரிக்கு அரு கில் வெடி பொருள் இருந்ததாகவும், அக்கருவிக்கு செய்தி ஒன்று அனுப்பப்பட்ட அடுத்த வினாடியே  ( உள்ளூர் நேரப்படி  3:30 மணியளவில்) வெடித்து சிதறியதாக வும் கூறப்பட்டுள்ளது. இந்த பேஜர்கள் இஸ்ரேல் உளவுத் துறையினரால் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்ப வத்திற்கு பிறகு இஸ்ரேல் கடுமையான விளைவுகளை சந்திக்கப்போகிறது என ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது.  மேலும் இந்த பேஜர் தைவானில் இயங்கி வரும் கோல்ட் அப்பல்லோ என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட் இந்த பேஜர்களில் வெடி மருத்துகளை வைத்துள்ளது என லெபனான் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இதனைத் தொடர்ந்து  கோல்ட் அப்பல்லோ நிறுவனத்திற்கும் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் நேரடியாக அந்த பேஜர்களை உற்பத்தி செய்யவில்லை. இந்த பேஜர்கள்  ஐரோப்பிய நிறுவனத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்று  அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹ்சு சின்-குவாங் தெரிவித்துள் ளது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.