tamilnadu

img

ஐபிஎல் - 2025 : இன்றைய ஆட்டம்

ஐபிஎல் - 2025 : இன்றைய ஆட்டம்

இடம் : 
என்.எம். மைதானம், குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட் ஸ்டார் (ஒடிடி)

மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் அரிய வகை பறவைகள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 8 கி.மீ., தென்கிழக்கே உள்ள இந்த மணல் திட்டுகள் உள்ளன. இவை மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.  இந்நிலையில்,  இந்த மணல் திட்டுகளில் பல்வேறு ஆராய்ச்சி  குழுக்கள் இணைந்து சமீபத்தில் மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்பில் 6 அரிய வகை பறவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பழுப்பு நோடி (Brown Noddy) மற்றும் 5 வகையான டெர்ன் (tern - தமிழில் ஆலா என்று கூறு வார்கள்) பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் டெர்ன்  வகைகளில் பிரைடில்ட் டெர்ன்,  சான்டர்ஸ் டெர்ன், லிட்டில் டெர்ன்,  கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன் மற்றும் ரோசியேட் டெர்ன் ஆகும். 

மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் குப்பைகளில் கொட்டும் விவசாயிகள்

லை கடும் வீழ்ச்சியடைந்து வருவ தால் மதுரை மாட்டுத்தாவணி சந்தை யில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முருங்கைக் காய்களை பெருமளவில் குப்பைகளில் கொட்டி வருகின்றனர். மதுரை மாவட்டம் மற்றும் அண்டை  மாவட்டங்களில் இருந்து முருங்கைக் காய்கள் பெருமளவில் மதுரை மாட்டுத் தாவணி சந்தைக்கு வருகின்றன.  அதிக விளைச்சல் காரணமாக  புதன்கிழமை அன்று மாட்டுத்தாவணி சந்தையில் முருங்கைக் காய்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 ஆக சரிந்தது.

 சந்தைக்கு வரும் முருங்கைக் காய்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், விலை மேலும் வீழ்ச்சியடையும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். விவசாயிகள் வேதனை இதுதொடர்பாக விவசாயி கர்ணன் கூறுகையில், “வியாபாரிகள் முருங்கைக் காயை கிலோவுக்கு ரூ.5  முதல் ரூ.6 வரை மட்டுமே விலை கேட்கிறார்கள். இது எங்கள் பயணச் செலவை கூட ஈடுகட்டாது. 2-3 நாட்கள் முருங்கைக் காய் மூட்டையை வைத்தி ருந்தாலும் விற்க முடியவில்லை. கடை சியில் குப்பையில் தான் முருங்கைக் காய்களை கொட்டி வருகிறோம்” என வேதனையுடன் கூறினார்.

“தற்போதைய சூழ்நிலையில் ஒரு வியாபாரி சராசரியாக 10 முதல் 25 பைகள் (ஒரு பையில் 70-80 கிலோ) முருங்கைக் காய்களை குப்பையில் கொட்டுகிறார். ஆனால் தூய்மை பணி யாளர்கள் இந்த கழிவுகளை அப்புறப் படுத்த மறுக்கிறார்கள். வாங்கிய முருங்கைகளை விற்க முடியவில்லை.

இப்போது குப்பைக்கும் கொட்ட முடி யாத நிலை உள்ளது” என மதுரை மத்திய சந்தை அனைத்து வியாபாரி கள் சங்கத்தின் தலைவர் என். சின்ன மாயன் புகார் தெரிவித்தார். குளிர் கிடங்கு வசதி வேண்டும் சந்தையில் குளிர் கிடங்கு வசதி இல்லாததால் காய்கறிகளின் விலை வீழ்ச்சி சமயங்களில் அதிக அளவு காய்கறிகள் கழிவாகின்றன. இதனால் உடனடியாக குளிர் கிடங்கு வசதியை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.