விழுப்புரம், ஜன. 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் 2025 ஜனவரி 3,4,5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், மாநாட்டிற்கு வரு கை தரும் பிரதிநிதிகள் மற்றும் உறுப் பினர்களுக்கு வழிகாட்டுவதற்காக பிரத்யேக இணைய செயலி அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி, கட்சியின் விழுப்புரம் மாவட்டக்குழு அலுவலக வளாகத்தில், மாவட்டக்குழு உறுப்பி னர் உ. கார்க்கி தலைமையில் நடை பெற்றது. இணைய செயலி சேவையை தொடங்கி வைத்து, கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் ஆகியோர் பாராட்டினர். மாவட்டச் செயலாளர் என். சுப்பிர மணியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி. குமார், ஜி. ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. வீரமணி, தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ஏழுமலை, விதொச எஸ். அபிமண்ணன், சதீஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர். இந்த செயலி மூலம் பொதுகூட்டம் நடைபெறும் இடம், பொதுக்கூட்ட இடத்திற்கு வருவதற்கான வழிகாட்டும் வரைபடம் (Map), மாநாடு நடைபெறும் இடம், பிரதிநிதிகள் தங்கும் இடத்திற் கான வழிகாட்டும் வரைபடம் ஆகி யவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்த தகவல்களை பெறவும், மாநாடு பணிகளில் ஈடுபடும் தொண்டர்களின் விவரம் - அவர்களின் தொலைப்பேசி எண்களுடன் வழங்கப்பட்டுள்ளது. தாங்கள் புறப்படும் மாவட்டங்களி லிருந்து மாநாட்டிற்கு புறப்படும் நொடி யிலிருந்து மாநாடு நிறைவு பெறும் வரை தோழர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் மேற்காணும் இணைய செயலியில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.