இன்ஸ்டாகிராமின் புதிய எடிட்ஸ் செயலி அறிமுகம்!
இன்ஸ்டாகிராம், அதன் வீடியோ எடிட்டிங் செயலியான எடிட்ஸ்-ஐ (Edits) அறிமுகப்படுத்தி யுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், கடந்த ஜனவரி மாதத்தில் ‘எடிட்ஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அமெரிக்காவில் டிக்டாக் (TiKTok) மற்றும் கேப்கட் (CapCut) செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்ஸ்டாகிராம் இந்த புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏஐ உதவியுடன் உயர்தர வீடியோவை பதிவு செய்யும் அம்சம், வீடியோவில் keyframing, automatic captions, and camera settings for resolution ஆகியவற்றை மேம்படுத்தவும், வீடியோ எடிட்டிங், ஏஐ இமேஜ் அனிமேஷன் உள்ளிட்ட அம்சங்களும் ‘எடிட்ஸ்’ செயலியில் உள்ளது என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்காக இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் உள்நுழைந்து, இந்த செயலியை பயன்படுத்தலாம்.
கூகுள் மாநாடு 2025: ஆண்ட்ராய்டு 16, எக்ஸ்.ஆர் குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது!
ஆண்ட்ராய்டு 16, ஆண்ட்ராய்டு எக்ஸ்.ஆர், ஆண்ட்ராய்டு ஆட்டோமோடிவ்வில் ஜெமினி அம்சம் உள்ளிட்ட பல்வேறு அறிவுப்புகளை கூகுள் இந்த மாநாட்டில் வெளியிட உள்ளது. கூகுள் நிறுவனந்தின் டெவலப்பர்களுக்கான I/O மாநாடு 2025, வரும் மே 20, 21 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இடம்பெற உள்ள முக்கிய தலைப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநாட்டில் ஆண்ட்ராய்டுக்கான டெஸ்க்டாப் விண்டோவிங் (Desktop windowing), சிறந்த பல்பணி திறன்களை செயல்படுத்துதல் மற்றும் ஜெமினி நானோவால் இயக்கப்படும் புதிய ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் APIகள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறஉள்ளது. இவை உரை சுருக்கம், உரையை சரிபார்த்தல், திருத்தம் செய்தல் மற்றும் பட விளக்கங்களை உருவாக்கு வது போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. மெட்டீரியல் 3 எக்ஸ்பிரசிவ் (Material 3 Expressive), ஆண்ட்ராய்டு எக்ஸ்.ஆர் கொண்டு புதிய செயலிகளை உருவாக்குதல் குறிப்பாக கூகுள் டிவி, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட செயலிகளிலுடன் ஜெமினியை ஒருங்கிணைப்பு, கூகுள் பே, கூகுள் வேலட் அம்சங்கள், ஜெமினி நானோ குறித்த அப்டேட்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் புதிய பிரைவசி அம்சம்!
வாட்ஸ்அப்பில் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக ‘Advanced Chat Privacy’ என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் தாங்கள் விரும்பும் சாட்டை (Chat) கிளிக் செய்து, இந்த Advanced Chat Privacy’ அம்சத்தை செயல்படுவதன் மூலம், சாட்கள் தானாகவே export செய்வதும், புகைப்படங்கள், வீடியோக்கள் தானாக பதிவிறக்கமாவதையும் தடுக்க முடியும். வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து தகவல் எடுக்கப்படுவதையும் இது தடுக்கிறது. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை தறவிறக்கம் செய்து, இந்த அம்சத்தை பயனர்கள் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.