tamilnadu

புதுக்கோட்டையில் உலக மகளிர் தினவிழா

புதுக்கோட்டையில் உலக மகளிர் தினவிழா

மாதர் சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான எம். சின்னதுரை தொடக்கவுரையாற்றினார்.  மாதர் சங்க மாநில செயலாளர் ஜி.ராணி நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, அம்பிகா, கல்வி அறக்கட்டளை நிர்வாகி சந்திரா ரவீந்தரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ.வைகைராணி உள்ளிட்டோர் பேசினர். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு சிஐடியு மாநிலச் செயலளார் எஸ்.தேவமணி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு தொடக்கவுரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் எம். ஐடாஹெலன் நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ். பாலசுப்பிரமணியன், மாநகர ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. ரகுமான உள்ளிட்டோர் பேசினர்.