கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கோயம்புத்தூர், டிச. 30 - கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 9.67 கோடி மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சர்வதேசத் தரத்தி லான ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் துணை முத லமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பேசுகையில்: “கோவைக்குப் புத்தாண்டு பரிசாக ரூ. 10 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மை தானத்தை திறந்து வைத்துள் ளேன். இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகள் இங்கும் நடைபெறும். எஸ்.ஐ.எச்.எஸ் கால னியில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2010-ஆம் ஆண்டு கலை ஞரால் அடிக்கல் நாட்டப் பட்டது ஆனால் அதிமுக ஆட்சியில் அதனை கிடப்பில் போட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அமைச்சர் எஸ். ராஜ கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி எம்எல்ஏ, கணபதி ராஜ்குமார் எம்.பி., வனத் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சீனி வாஸ் ரெட்டி, ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்ப னவர், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாந கராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
