தென்காசி, செப்.25- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சங்குளம் கிரா மத்தில் தீண்டாமை வன் கொடுமையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அகில இந் திய காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கம் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ரூ.20000 மதிப்புள்ள மளிகைப் பொருட் கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் சுவாமி நாதன், சங்கரன்கோவில் கிளை செயலாளர் ஸ்டாலின் அசோக், பூபதி, பொது இன் சூரன்ஸ் செயலாளர் சிராஜீ தீன், தீ.ஒ.முன்னணி தென் காசி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டலச் செய லாளர் கருப்பையா, சிபிஎம் சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.