tamilnadu

img

பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி ரத்து

பாலியல் குற்றங்களில் ஈடு படும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் ரத்து செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறி வித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல்  வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ்  கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் சின்ன சாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் 4 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

புதிய சட்டம் மூலம் பாலியல்  குற்றங்களை தடுக்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட் டால், ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் அன்பில்  மகேஸ் தெரிவித்தார்.