மதுரை,ஏப்.05- ரயில்வே துறை சார்பாகக் கட்டுரை போட்டியில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறை சார்பில் நடத்தப்படும் பயணக் கட்டுரைகளுக்கான போட்டியில் இந்தி மொழியில் மட்டுமே எழுத வேண்டும் என்ற அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா?
இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை.
இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியைத் திணிப்பது மட்டுமே. ரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று!