tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் டி. அருள்தாஸ் மற்றும் எஸ். சுகன்யா ஆகியோரின் திருமணத்தை பிப்.13 (வெள்ளிக்கிழமை), கச்சனம், அகிலா திருமண மஹாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் நடத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.