tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு பாகிஸ்தானைக் கடுமையாக சாடிய இந்தியா!

இஸ்லாமாபாத், ஏப். 29 - ஐ.நா. அவையில் பாகிஸ்  தானை கடுமையான முறை யில், இந்தியா சாடியுள்ளது. “உலகளாவிய பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு” என இந்தியா குறிப்பிட்டுள்ளது. “அமெரிக்கா இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடு களின் காரணமாக தான்  பயங்கரவாதம் வளர்ந்துள் ளது” என பாகிஸ்தான் அமைச்சர் ஆசிப் முகமது கவாஜா, கடந்த சில நாட்களுக்கு  முன், ஐ.நா. அவையில் பேசி இருந்தார். இந்நிலையில், ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர துணைப் பிரதிநிதி யோஜ்னா படேல் பேசிய போது, “உலகளாவிய பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு” என்று பாகிஸ்தானை சாடியுள்ளார். “பாகிஸ்தான் பாது காப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி யிருக்கும் அவர், ஆசிப் பேச்சு யாருக்கும் ஆச்சரியம் அளிக்க வில்லை” என்று குறிப்பிட்டுள் ளார். “2008-ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்கு தலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ள னர்” என்று தெரிவித்த அவர், “பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றும் குறிப்பிட்டார். தாக்குதலை எதிர்கொள்ள  தயாராக இருக்கிறோம்! “இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் (தாக்குதல் நடத்தும்) அதனை எதிர்கொள்ள எங்கள் ராணு வத்தை நாங்கள் வலுப்படுத்தி யுள்ளோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், தனி யார் செய்தி நிறுவனத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரி வித்துள்ளார். “போர் உருவானால் பாகிஸ்தான் அணு ஆயுதங் களை பயன்படுத்துமா? என்ற கேள்விக்குப் பதிலளித் திருக்கும் அவர், “இவ்விஷ யத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். அதேநேரத்தில், எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன் படுத்துவோம்” என்றும் கவாஜா  முகமது ஆசிப் குறிப்பிட்டுள் ளார்.

3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்!

சென்னை, ஏப். 29 - தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. “குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு  மற்றும் மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே  5 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களி லும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல மே 3-ஆம் தேதி வரை  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் ஓருசில இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.