tamilnadu

போக்சோ வழக்குகள் அதிகரிப்பது விழிப்புணர்வின் அடையாளம்’ குழந்தை உரிமை ஆர்வலர் ஏ. தேவநேயன்

போக்சோ வழக்குகள் அதிகரிப்பது விழிப்புணர்வின் அடையாளம்’ 

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கான போக்சோ (POCSO) சட்டத்தின்  கீழ் பதிவான வழக்குகளில் தமிழ்நாடு 2024ஆம் ஆண்டு இதுவரை இல்லாத வகையில் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளது. அதாவது 2023ஆம் ஆண்டு 4,581 இருந்த போக்சோ வழக்குகள், 2024ஆம் ஆண்டு 6,975 ஆக உயர்ந்துள்ளன. இது கடந்த ஆண்டை விட 52.3 விழுக்காடு உயர்வு ஆகும். இந்நிலையில், குழந்தை உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த போக்சோ வழக்குகளின் பதிவு அதிகரிப்பை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் திடீர் வளர்ச்சி அல்லது அபாயகரமான நிலை என்று பார்க்காமல் விழிப்புணர்வு மற்றும் முன்பு பதிவு செய்யப் படாமல் போன வழக்குகள், தற்போது பதிவு செய்யப்படுவ தால் அதிகரித்துள்ளது. அதாவது 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத வழக்குகள் 2024இல் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் போக்சோ வழக்குகள் ஒரே ஆண்டில் திடீரென உச்சம் தொட்டுள்ளது.  இதுதொடர்பாக குழந்தை உரிமை ஆர்வலர் ஏ.தேவ நேயன் கூறுகையில்,”எனது அறிவுரை என்னவென்றால் அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் மேம்பட்ட அறிக்கை செய்யும் முறைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினர் இத்தகைய சம்பவங்களை பதிவு செய்ய வருகின்றனர். இதுவும் போக்சோ வழக்குகளுக்கு அதிகரிப்பிற்கான முக்கிய காரணம் ஆகும்” என அவர் கூறினார்.