tamilnadu

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் வருமான வரி ஊழியர் சம்மேளன மாநாடு வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் வருமான வரி ஊழியர் சம்மேளன மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜன. 14 - தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்க ளில் தமிழகத்தைச் சேர்ந்த வர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வருமான வரி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. வருமானவரி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சர்க்கிள் 15ஆவது மாநில மாநாடு ஜன.9-10 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டில், பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலை யில் 20 சதவீத சம்பளத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். 1.1.2026 முதல் 50 சதவீத அகவிலைப் படியை அடிப்படை சம்ப ளத்துடன் இணைக்கவேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டது. இந்த மாநாட்டில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எம்.சந்தானம் சங்க கொடியை ஏற்றினார்.  முதன்மை தலைமை வரு மான வரி ஆணையர் சுதாகர ராவ் மாநாட்டை தொடங்கி  வைத்தார். ஆர்.சச்சிதா னந்தம் எம்.பி., சம்மேளனத் தின் அகில இந்திய மகா பொதுச் செயலாளர் ரூபக் சர்க்கார், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத் தின் மாநிலப் பொதுச்செய லாளர் ஆர்.பி.சுரேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் எம்.பாஸ்கரன், சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார் உள்ளிட்ட தோழமை சங்கத் தலைவர்கள் உரையாற்றினர். மறைந்த ஊழியர் ஆர்.டபிள்யு ரத்தினகுமார் மனைவியிடம் தோழர் கே.கே.என்.குட்டி அறக் பட்டளை சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. சம்மேளனத்தின் சர்க்கிள் தலைவராக ஆர்.ஆர். ஷ்யாமநாத், பொதுச்  செயலாளராக எம்.எஸ்.வெங்கடேசன், பொருளாள ராக பி.வசந்த்ராஜா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.