tamilnadu

கல்வி உதவித்தொகைக்கு வருமான வரம்பை

கல்வி உதவித்தொகைக்கு வருமான வரம்பை

அதிகரிக்க வலியுறுத்தல் சென்னை, மார்ச் 23 - நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 10 ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், நாட்டில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் குறித்த எதிர்க்கட்சி களின் கேள்விகளும், அதற்கு ஒன்றிய அரசு அளிக்கும் பதில்களும் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற மாநிலங்கள வையில் பேசிய தி.மு.க எம்.பி. பி.வில்சன், எஸ்.சி., எஸ்.டி.,  மற்றும் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்கள், போஸ்ட்- மெட்ரிக்  மற்றும் ப்ரீ- மெட்ரிக் கல்வி உதவித்தொகையை பெறு வதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பை ரூ.8 லட்ச மாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர்கள், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ- மெட்ரிக் கல்வி உதவித்தொ கையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பா னது நெடுநாட்களாக ரூ.2.5 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இந்திய அரசாங்கமானது சமீபத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான வரம்பினை ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதேபோன்று எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கான தேசிய  வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் உயர்தர கல்வித்திட்டம் போன்ற திட்டங்களுக்கான வரம்பு ரூ.8 லட்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், போஸ்ட்- மெட்ரிக் மற்றும் ப்ரீ-மெட்ரிக் உதவித்தொகை திட்டங்களுக்கு  இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் பின்தங்கிய நிலையிலிருக்கும் ஏராளமான தகுதி படைத்த மாணவர்கள் இந்த உதவித்தொகையை பெற முடியவில்லை. எனவே, போஸ்ட் - மெட்ரிக் மற்றும் ப்ரீ - மெட்ரிக் கல்வி  உதவித்தொகையை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பினை ரூ.8 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித் துள்ளார்.