நாடகவியலாளர் பிரளயன் உட்பட 45 கலைஞர்களுக்கு முதல்வர் நிதியுதவி
நாடகவியலாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர் கள் சங்கத்தின் மாநிலத் தலை வர்களில் ஒருவரான பிரளயன் உட்பட 45 கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ் 40 லட்சம் ரூபாய்க்கான நிதி உதவி களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் வழங்கினார்.
நலிந்த கலைஞர்கள்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் ஆச்சாள்புரம் எஸ். சின்ன தம்பி, ஆக்காட்டி ஆறுமுகம், நெல்லை சுந்தரராஜன், மதுரை ஜி.எஸ். மணி, ஏ.என். பாக்கிய லட்சுமி, சீதாலட்சுமி (எ) ஜி.எம். சித்தி ரைசெல்வி, வி. நாகு, பி. சீதா லட்சுமி, ஆர்.எஸ். ஜெயலதா, எஸ். ஆண்ட்ரூஸ் ஆகியோருக்கு பொற் கிழி தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருந்தாளிகளுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை தமிழ்நாடு முதல்வர் வழங்கினார்.
5 நூலாசிரியர்களுக்கு நிதியுதவி
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களைப் பதிப் பிக்க சண்முக செல்வகணபதி, ப. ரங்கராஜ், வளப்பக்குடி வீரசங்கர், இரா. சீனிவாசன், செ. நடராஜன் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு நிதி யுதவி வழங்கிடும் அடையாளமாக 2 நூலாசிரியர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான ஆணை களை முதல்வர் வழங்கினார்.
தமிழில் புதிய நாடகங்கள்
தமிழில் புதிய நாடகங்கள் மற் றும் நாட்டிய நாடகங்கள் தயா ரித்து மேடையேற்றம் செய்திட நாடகவியலாளர் பிரளயன் உள் ளிட்ட 5 நாடகக் கலைஞர்களுக் கும், 5 நாட்டியக் கலைஞர்களுக் கும் நிதியுதவி வழங்கிடும் அடையா ளமாக 4 கலைஞர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் நிதியுதவிக் கான ஆணைகளை முதல்வர் வழங்கி னார். இதில், மணிமேகலை காப்பி யத்தைப் பின்னணியாக இயக்கப் பட்ட ‘சித்ராபதி’ நாடகத்திற்காக பிர ளயனுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், மறைந்த 20 கலை ஞர்களின் மரபுரிமையினருக்கு குடும்பப் பராமரிப்பிற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி டும் அடையாளமாக 2 மரபுரிமை யினருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலைகளை யும் முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செய லாளர் நா. முருகானந்தம், துறை செயலாளர் க. மணிவாசகன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.