சங்கம் வளர்த்த மதுரையிலே
மாநாடய்யா மாநாடு மாநாடு
மதவெறி நஞ்சை கில்லி எறிந்திடும்
மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு
அகில இந்திய மாநாடு (மாநாடய்யா)
பணநாயகத்தை பாடையில் ஏற்றி
ஜனநாயகம் காத்திடவே
சிக்காகோ நகரில் சிந்திய ரத்தம் தான்
செங்கொடி தந்த மாநாடு (மாநாடய்யா)
ஒரே தேர்தல் என்றும் ஒரே தேசம் என்றும்
வீராப்பு பேச்சு ஓயலையே
மனதில் மட்டும் சாதி மதவெறி
மருந்துக்கு கூட மாறலையே
அட்டையாய் வாழ்க்கை ரத்தம் உறிஞ்சும்
அரக்கர் கூட்டத்தை அழித்திடவே
வழியற்று நின்று புலம்பாதேடா
புறப்படு மனிதா பேரணிக்கு (மாநாடய்யா)
சொத்து பத்தை எல்லாம் வித்து படித்தவன்
இத்துப் போயிட்டான் வேலையில்லை
கத்தை கத்தையாய் கரன்சி உள்ளவன்
கலர் கலரான வாழ்க்கையிலே-அட
செத்துப் போவது ஒருமுறை தாண்டா
புறப்பட்டு வாடா வீதியிலே
புத்தம் புதிதாய் வாழ்க்கை அமைந்திட
கம்யூனிஸ்ட்ட விட்டா நாதிஇல்லே (மாநாடய்யா)
சங்கம் வளர்த்த மதுரையிலே
செந்தொண்டர் செம்படை பேரணியாம்
புறப்படு மனிதா போய் வரலாம்
மதுரையை செம்மயம் ஆக்கிடலாம் (மாநாடய்யா)
மலரப் போவது செவ்வானம்
மதுரையில் திரளும் பெரும் கூட்டம் அது மண்ணைக் காக்கும் திருக்கூட்டம் வேர்வை மனிதர்கள் சந்திப்பு விடியலுக்கான அறிவிப்பு கங்குகள் பெருகி சுடராக தங்கும் இருட்டு விலகி விடும் கம்யூனிஸ்ட்டுகள் கூடுகையில் காரியம் ஆயிரம் கூடிவரும் உழைக்கும் வர்க்கம் ஒரு பக்கம் ஊழல் மதவெறி மறுபக்கம் நம்மண் செம்மண் ஆனால் தான் நாட்டின் வளங்கள் பெருகிவரும் நேர்மை ஒரு கண் தியாகம் மறுகண் தீர்வைத் தருபவர் காம்ரேட்டு பார்வையில் தெளிவு பழகிக் கொள்வார் படித்து உரைகள் பல கேட்டு ஊர் மானம் காக்கும் தீர்மானம் உலகை ஜெயிக்கும் பெரும் ஞானம் கைகள் கோர்த்து பலம் சேர்த்து காணப்போவது செவ்வானம் மஞ்சளும் சுண்ணாம்பும் சேருகையில் ஆரத்தி சிவப்பு உண்டாகும் நெஞ்சுரம் செயல்திறன் சேருகையில் தத்துவச் சிவப்பு வென்றுவிடும்.