tamilnadu

மதுரையின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

மதுரையின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்

மதுரை, டிச.18- மதுரையின் அடிப்படை கட்டமைப்பு களை மேம்படுத்தி, போக்குவரத்து நெரி சலை குறைத்து, தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்கள் நலனை உறுதி செய்ய வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை  மாநகர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச்  செயலாளர் மா.கணேசன் தமிழ்நாடு முதல மைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு பாராட்டு- நன்றி அந்தக் கடிதத்தில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் இளைஞர் நலன் சார்ந்த  துறைகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து  செயல்படுத்தி வருவதை கட்சி வரவேற்ப தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும்  போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக  மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மானகிரி, கோரிப்பாளையம் பகு திகளில் மேம்பால கட்டுமானப் பணிகள், மாட்டுத்தாவணி பகுதியில் தகவல் தொழில்  நுட்ப பூங்கா கட்டுமானம் நடைபெற்று வரு வதையும், மேலமடை பாலம் மக்கள் பயன்  பாட்டிற்கு வந்ததையும் கட்சி சுட்டிக்காட்டி யுள்ளது. பந்தல்குடி கால்வாய் சீரமைப்பிற்கு  ரூ.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக தமி ழக முதலமைச்சருக்கு நன்றியும் தெரிவிக் கப்பட்டுள்ளது. புதிய பாலங்களுக்கு  நிதி ஒதுக்கிடுக! தமிழகத்தின் இரண்டாவது தலைநகர மாக விளங்கும் மதுரையில், மக்கள் தொகை  பெருக்கம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரி சல் கடுமையாகி வருவதாக கடிதத்தில் குறிப்  பிடப்பட்டுள்ளது. இதனை குறைக்கும் வகை யில், மதுரை நகரில் புதிய பாலங்கள் அமைக்கவும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலங்களை மறுசீரமைப்பு செய்ய வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி  கேட்டுக் கொண்டுள்ளது. வைகையாற்றின் மேல் அமைந்துள்ள மதுரை பைபாஸ் – காமராஜர் பாலம் அருகில்  புதிய மேம்பாலம், தத்தனேரி – ஆரப்பாளை யம் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்தல்,  40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள மேயர் முத்துப்பாலம், வ.உ.சி. ரயில்வே மேம்பாலம், தெற்குவாசல் – வில்லா புரம் இணைப்பு மேம்பாலம் ஆகியவற்றை மறுகட்டுமானம் செய்ய நிதி ஒதுக்க வேண்  டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் மீட்டர் கட்டணத்தை கைவிடுக! மேலும், பெரியாறு மூன்றாவது கூட்டு குடிநீர் (அம்ருத்) திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், குடிநீருக்கு மீட்டர் பொரு த்தி கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை கைவிட்டு, முந்தைய முறையை தொடர வேண்டும் என்றும் கட்சி கோரியுள்ளது. மதுரை ரயில் நிலையம், கிழக்கு நுழைவு வாயில், டவுன்ஹால் ரோடு, பெரியார் பேருந்து நிலையம், காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட், கீழவாசல், சிந்தாமணி ரோடு, கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நடை சுரங்கப்பாதைகள் அமைக்க வேண்டும் என்றும், வடக்கு பகுதியில் இருப்பதைப் போல தென்பகுதியிலும் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை பாதுகாத்திடுக! பந்தல்குடி கால்வாய் தவிர மதுரை நக ருக்குள் செல்லும் 10 கால்வாய்களை தூர்வாரி, இருபுறமும் சுவர் எழுப்பி பாது காக்கவும், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு போது மான வசதியுடன் கூடிய அரசு அடக்கத்தலம்  அமைக்க இடம் ஒதுக்கவும் கடிதத்தில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்லூர், மாடக்குளம், தென்  கால், மானகிரி, வீரமுடையான் உள்ளிட்ட கண்மாய்களை ஆழப்படுத்தி, கரை உயர்த்தி நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மழைநீர் சேகரிப்பை உறுதி செய்யவும் நிதி  ஒதுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் பாதாளச் சாக்கடை திட்டத்திற்காக ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்ட பணி களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி, மாஸ்டர்  பிளான் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் கடைகளை திறந்திடுக! மதுரையின் தொழில் வளர்ச்சிக்காக தூத்துக்குடி பிரதான சாலை பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட காம்ப்ளக்ஸ் பஸ்  ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கடைகளை வணிகர்களின் நலன் கருதி உடனடியாக திறக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. நுண்ணுயிரியல் தொற்று நோய் ஆய்வகம் அமைத்திடுக!  மேலும், சட்டமன்ற விதி எண் 110ன் கீழ்  அறிவிக்கப்பட்ட புட்டுத்தோப்பு – அண்ணாத்  தோப்பு இணைப்பு மேம்பால பணிகளை  தொடங்க வேண்டும், மதுரை மருத்துவக்  கல்லூரியில் நுண்ணுயிரியல் தொற்று நோய் ஆய்வகம் அமைக்க வேண்டும், சேத மடைந்த சாலைகளை உடனடியாக சீர மைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. குப்பை வரியை குறைத்திடுக! மதுரை மாநகராட்சியில் குப்பை வரியாக மாதம் ரூ.1000 வசூலிக்கப்படுவதாகவும், இது சென்னையில் ரூ.300ம், கோவையில் ரூ.500ம் என வசூலிக்கப்படும் மாநகராட்சி களுடன் ஒப்பிடுகையில் அதிகம் எனவும் சிபிஎம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை, எளிய  மற்றும் நடுத்தர மக்கள் அதிகமாக வாழும்  மதுரை நகரில் குப்பை வரியை குறைக்க பரி சீலிக்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. போதுமான நிதியை ஒதுக்கிடுக! இந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தேவையான நிதியை அரசு போதிய அளவில் ஒதுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது.