tamilnadu

img

பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்

சென்னை, ஜன.11- தமிழகத்தில் பத்திரிகையாளர்க ளின் நிலுவையில் உள்ள பிரச்சனை களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரின் கவனத்து க்கு கொண்டு சென்று தீர்வு காண முயற் சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி எம்.எல்.ஏ. உறுதிய ளித்தார். தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலி ஸ்ட்ஸ் (TUJ) சார்பில் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன், பொதுச் செயலாளர் கே.முத்து, அமைப்புச் செயலாளர் பி.ஆர்.வேளாங்கண், சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பி.தேவேந்திரன் ஆகியோர் ஜனவரி 10 அன்று மாலை நாகை மாலி எம். எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கோரப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள்: H பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை களைத் தளர்த்துதல். Hநீண்ட காலமாக ஊடகத்துறை யில் பணிபுரியும் ஊரக பத்திரிகையா ளர்களை உடனடியாக நலவாரி யத்தில் இணைத்தல். Hசிறு பத்திரிகைகளுக்கான அரசு அங்கீகார அட்டை, பிரஸ் பாஸ் வழங்குவதற்கான 10 ஆயிரம் பிரதிகள் அச்சிடும் நிபந்தனையைத் தளர்த்துதல். Hதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த பத்திரிகையாளர்க ளின் கோரிக்கைகளை நிறை வேற்றுதல். இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட நாகை மாலி எம்.எல்.ஏ., பத்திரிகையாளர்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். இக்கோரிக்கைகளை முதலமைச்சர் மற்றும் செய்தித்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்வு காண ஆவன செய்வதாக உறுதி யளித்தார்.