மனித சமூக உறவுகளும் கொரில்லாக்கள் கற்றுத் தரும் பாடமும்
மனிதக் குழுக்களில் நட்பு என்பது சிக்கலானது. அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படக்கூடியது. ஆனால் மலைவாழ் கொரில்லாக்களின் சமூகங்களிலும் முடியைப் பிய்த்துக்கொள்ளும் அளவு சிக்கல்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் நடந்த ஆய்வு கூறுகிறது. மனிதனின் சமூக உறவுகள் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றிய குறிப்புகளை கொரில்லாக்கள் இடையில் நடந்த இந்த ஆய்வு அளிக்கிறது. கொரில்லாக்களும் அவற்றின் சமூகத் தொடர்புகளும் ருவாண்டாவில் (Rwanda) 164 கொரில் லாக்களிடையில் நடத்தப்பட்ட ஆய்வு மற்றவர்களுடன் நெருக்கமாகப் பழகு வது எவ்வாறு குழுவின் அளவையும் பாலு றவையும் பாதிக்கிறது என்பதை விளக்கு கிறது. ருவாண்டாவில் வாழும் 164 கொரில்லாக்களின் ஆரோக்கியம் பற்றிய தரவுகள் ஆராயப்பட்டது. மற்றவர்களு டன் நெருக்கமாக இருப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் குழுவின் அளவைப் பொறுத்து மாறுகின்றன. ஆண்-பெண் கொரில்லாக்களிடை யில் இந்த பயன்கள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக சிறிய குழுக்களில் அதிக நட்புடன் வாழும் பெண் கொரில்லாக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதில்லை. ஆனால் அவை ஒரு சில குட்டிகளை மட்டுமே பெறுகின்றன. பெரிய குழுக் களில் வாழ்பவை நோய்களுக்கு அடிக்கடி ஆளாகின்றன. ஆனால் அதிக குட்டி களை பிரசவிக்கின்றன. அதே சமயம் வலிமையான சமூக பிணைப்புகளுடன் உள்ள ஆண் கொரில் லாக்கள் அதிகமாக நோய்வாய்ப்படு கின்றன. மோதல்களின்போது இவை காய மடையும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. டயான் ஃபாஸி கொரில்லா நிதியம் (Dian Fossey Gorilla Fund), ஜூரிச் (Zurich) மற்றும் எக்ஸிட்டர் (Exeter) பல்கலைக்கழகங்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் மனிதர்கள் உட்பட மற்ற சமூக விலங்குகளில் சமூக உறவுகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிய உதவும். வலிமையான சமூக உறவுகளை அதிக அளவில் பெற்றிருப்பது நல்லது தான். என்றாலும் சில நேரங்களில் அது நாம் எதிர்பார்ப்பது போல அமைவ தில்லை. பெண் கொரில்லாக்களிடையில் குறைவாக காணப்படும் வலிமையான, நிலையான சமூகப் பிணைப்புகளால் தான் அவை குறைவாக நோய்வாய்ப்படு கின்றன என்று கூறமுடியாது. இதை ஆண் கொரில்லாக்கள் அதிக அளவிலான சமூகத் தொடர்புகளால் நோய்களுக்கு அதிகம் ஆளாகின்றன என்பதுடன் ஒப்பிடமுடியாது. பெண் மற்றும் குட்டிகளை பாது காக்க வேண்டியிருப்பதால் ஆண் கொரில் லாக்கள் அவற்றுடன் நெருக்கமான சமூக உறவுகளைக் கொண்டுள்ளன. இதற்காக அவை அதிக ஆற்றலைச் செலவிடுகின் றன. இந்த அழுத்தத்தால் அவற்றின் நோய் எதிர்ப்பாற்றல் குறையலாம். குழுவில் ஒரு ஆண் கொரில்லா மிகப் பிரபலமான தாக இருந்தால் அதற்கு பொறுப்புகள் அதிகம்” என்று ஆய்வின் முன்னணி ஆசிரி யர்களில் ஒருவரும் ஜூரிச் பல்கலைக்கழ கத்தின் மூத்த ஆய்வாளருமான ராபின் மாரிஸன் (Robin Morrison) கூறுகிறார். டைட்டஸும் மாகியும் பொதுவாக ஒரு ஒற்றை ஆணின் கீழ் 12 கொரில்லாக்கள் குழுவாக வாழும் ருவாண்டா தேசிய எரிமலைப் பூங்காவில் (Volcanoes national park) மேற் கொள்ளப்பட்ட உற்றுநோக்கல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது. “வேறுபட்ட ஆளுமைகளுடன் உள்ள கொரில்லாக்கள் இணைந்து ஒற்றுமை யுடன் ஒரு குழுவாக வாழ்வது ஆச்சரியமா னது. மிக அமைதியான, மற்ற உறுப்பி னர்களுடன் அரிதாக பழகும் கொரில்லாக் களும் உள்ளன. இவை மிக ஆதிக்க குண முடன் காணப்படுகின்றன. சில கொரில்லாக்கள் கருணை மிக்கவை. ஒவ்வொன்றும் வெவ்வேறு துறைகளில் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன” என்று மாரிஸன் கூறுகிறார். நான்கு வயதாக இருந்தபோது தாயை இழந்த, தந்தை மற்றும் இதர உறுப்பி னர்களை வேட்டையாளர்களிடம் இழந்த டைட்டஸ் (Titus) என்ற சில்வர் முதுகு வகையைச் சேர்ந்த வயது வந்த கொரில்லா (silverback adult male gorilla) ஆய்வு செய்யப்பட்ட கொரில்லாக் களில் ஒன்று. ஆறு வயதான இகாசி (Ikaze) என்ற பெயருள்ள அதன் மகளால் டைட்டஸ் பராமரிக்கப்பட்டது. இந்த கொரில்லா தன் பதினைந்தாவது வயதில் குழுவிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றது. இதன் தலைமைப் பண்பு அசாதாரணமானது. அற்புதமான மிருதுத் தன்மையுடனும் அமைதியுடனும் குழுவின் தலைவராகச் செயல்பட்டது. இந்த பண்பு பெண் கொரில்லாக்களை அதிகமாக கவர்ந்தது. இருபது ஆண்டுகள் செல்வாக்கு மிக்க ஆண் கொரில்லாவாக டைட்டஸ் திகழ்ந்தது. மற்றொரு குழுவில் உயர் தரத்துடன் இருந்த மாகி (Maggie) என்ற பெண் கொரில்லா குழு உறுப்பினர்களிடையில் அடிக்கடி ஆக்கிரமிப்பு குணத்துடன் செயல்பட்ட ஒரு கொரில்லா. ஆனால் மிக வேகமாக அரவணைத்து மற்ற கொரில்லாக்களிடம் நட்புடன் ஆதரவாகப் பழகும் தன்மை உடையது அது. பல சம யங்களிலும் அது குழுவின் பாதுகாவல ராக செயல்பட்டது. வழக்கமாக ஆண் கொரில்லாக்களே இந்த பணியை செய்யும். குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஆண் கொரில்லா திடீரென்று இறந்ததால் மாகி எதிர்பாராதவிதமாக தலைமைப் பொறுப்பேற்றது. மாகியின் குழு இன்னொரு குழுவுடன் இணையும் வரை அது தன் குழுவை பாதுகாத்தது. “மனிதப் பரிணாமத்தின் வரலாற்றை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டு கிறது. சிலர் அதிக சமூகத் தொடர்புகளு டன் உள்ளனர் என்பதற்கும் சிலர் ஏன் அவ்வாறு இல்லை என்பதற்கும் இந்த ஆய்வு விடை காண முயல்கிறது. குறைந்த நண்பர்களுடன் வாழும் மனிதர்கள் சிலர் தாங்கள் இயன்றவரை சமூகத்து டன் அதிகமாகப் பழகுகிறோம் என்று சொல்வதில் உண்மையில்லை. நடை முறையில் குறைவான நன்பர்களுடன் வாழும் சில தனி நபர்கள் சமூகத்துடன் மிக நன்றாகவே பழகுகின்றனர்” என்று மாரிஸன் கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை தேசிய அறிவியல் அகாடமி என்ற இதழில் கொரில்லா இனங்களின் குழு, தனிநபர் மற்றும் சமூகத் தொடர்பு கள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
