காட்டுநாயக்கன் பழங்குடியினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மறுப்பு நிலக்கோட்டை வட்டாட்சியரைக் கண்டித்து மலைவாழ் மக்கள் சங்கம்-சிபிஎம் முற்றுகை
ஒரு மாதக்காலத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வட்டாட்சியர் உறுதி
சின்னாளப்பட்டி, ஜூலை 4- காட்டுநாயக்கன் பழங்குடி யினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கும் நிலக்கோட்டை வட்டாட்சி யரைக் கண்டித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜூலை 4 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தால் ஒரு மாதக்காலத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட 11 ஆவது வார்டு புதுப்பட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து காட்டு நாயக்கன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர் களுக்கு பல்வேறு விசாரணை களுக்குப் பின் 2005ஆம் ஆண்டு இந்து காட்டுநாயக்கன் என்ற பழங்குடி சான்று தமிழக அரசால் வழங்கப் பட்டது. இந்த சான்று தொடர்ச்சியாக வரு வாய் கோட்டாட்சியரால் வழங்கப் பட்டு வருகிறது .கடந்த ஆண்டு வரை சாதிச்சான்று அட்டையில் வழங்கப் பட்டு வந்தது. தற்போது ஆன்லைனில் தான் சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தவிட்டுள்ளது. இதனடிப்படையில் நிலக்கோட்டை யில் உள்ள இ-சேவை மையத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக 20 சான்றுகளுக்கு மேல் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. வட்டாட்சியர் விஜயலெட்சுமி இ-சேவை மைய பொறுப்பாளர்களை அழைத்து புதுப் பட்டி பழங்குடியின காட்டுநாயக்கன் மக்களுக்கு என்னை கேட்காமல் சாதிச்சான்றிதழ் பதிவேற்றம் செய்யக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், “வட்டாட்சியர் விஜயலெட்சுமி இப்போக்கை கைவிட வேண்டும். உடனே சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து ஜூன் 4 வெள்ளி யன்று நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் அஜய் கோஷ், தலைவர் செல்லையா, மூத்த நிர்வாகி காளி யப்பன், மாவட்ட நிர்வாகி குருசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தால் பணிந்த வட்டாட்சியர் போராட்டக் காலத்திற்குள் அலு வலக ஊழியர் ஒருவர், பேச்சுவார்த்தை க்கு வட்டாட்சியர் அழைப்பதாக கூறி னார். பேச்சுவார்த்தைக்கு தலைவர்கள் சென்றபோது, நான் உங்களை அழைக்கவில்லை என்று கூறி வட்டா ட்சியர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இதனால் முற்றுகைப் போராட்ட த்தை தொடருவோம் என்று தலை வர்கள் தெரிவித்தனர். அதன்பின்னரே வட்டாட்சியர், பேச்சுவார்த்தை நடத்தினார். வரு வாய் கோட்ட அலுவலர் (ஆர்டிஒ) செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர் வட்டாட்சியர் கூறுகை யில், வட்டாட்சியரகத்தால் நிறை வேற்றக் கூடிய கோரிக்கைகளை நிறை வேற்றுகிறோம். பேரூராட்சி சம்பந்தப் பட்ட கோரிக்கைகளை பரிந்துரை செய்கிறோம் என்று கூறினார். எச்சரிக்கை இதன்பின்னரே போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஒரு மாதக் காலத்திற்குள் வட்டாட்சியர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், மாவட்டம் முழுவதும் உள்ள பழங்குடியின மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பி.டில்லி பாபு தெரிவித்தார்.