tamilnadu

img

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி  பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்க! உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி '


துக்கோட்டை, ஏப்.20-  புதிய பென்சன் திட்ட்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தேர்தல், புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. தேர்தல் ஆணைர் சேவியர் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில், சிறப்பு பார்வையாளராக சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மா.குமரேசன் கலந்துகொண்டார். இத்தேர்தலில் மாவட்டத் தலைவராக க.ஜெயராம், செயலாராக சு.ரா.சுரேஷ், பொருளாளராக எஸ்.ராஜா, தலைமையிடச் செயலாளராக குரு.மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய முறையைத் தொடர வேண்டும். ஜாக்டோ ஜியோவின் மாநிலம் தழுவிய பேரணியில் பெருந்திரளான எண்ணிக்கையில் கலந்து கொள்வது, விராலிமலை விடைத்தாள் திருத்தும் மையத்தில் முறைகேட்டினை சரி செய்திட வேண்டும் எனபன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.