tamilnadu

img

எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை,அக்.25- திமுக குறித்து அவதூறாகப் பேசியதில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரிய வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் திமுகவை இணைத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதாகவும்,இதனால் திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது. இதனால் எக்ஸ் வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 25 அன்று நடைபெற்றது. . அப்போது, வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு,நோட்டீஸ் அனுப்பியுள்ளது.