மதுரை:
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வியாழனன்று கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் விரைவில் தொடங்கியுள்ளன. கேன்சரால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிகக் கட்டணத்தில் சிகிச்சை பெற இயலாத காரணத்தால், குறைந்த கட்டணத்தில் உரிய சிகிச்சை அளிப்பதற்கு மதுரை அரசு மருத்துவமனையில் ரூபாய் 20 கோடியில் உபகரணங்கள், ரூபாய் 5 கோடியில் கட்டடம், என மொத்தம் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில்புற்றுநோய் சிகிச்சை கட்டுப்படுத்தும்மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள் ளது. இன்னும் 20 நாட்களில் அந்தப் பணி நிறைவு பெறும் என்றார்.
கொரோனா பாதிப்புகள் துவங்கியவுடனே, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவிற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் COMPUTER RADIOGRAPHY கருவியுடன் MOBILE X-RAY கருவிகளை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரிமருத்துவர்.ஆர்.ரவீந்திரன், கண்காணிப்பாளர் டாக்டர்.சி.தர்மராஜ் ஆகியோரிடம் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். நவீன தொழில்நுட்பக் கருவியான இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே, மொபைல் எக்ஸ்ரே கருவியில் எடுத்த படங்களை டிஜிட்டல் எக்ஸ்ரே படமாக மாற்றமுடியும். இதன்மூலம் கொரோனா சிகிச்சைப்பிரிவு நோயாளிகள் அந்தந்த பிரிவுகளில் வைத்தே டிஜிட்டல் எக்ஸ்ரே படம் எடுக்க முடியும். இது நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சைபெற உதவியாக இருக்கும். இந்த கொரோனா தடுப்பு காலத்தில்மதுரை மக்களவை உறுப்பினர் சிரத்தை எடுத்து ஒரு முக்கியமான கருவியை மதுரை அரசு மருத்துவ மனைக்கு வாங்கி வழங்கியுள்ளார்.
இதையும் சேர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் கூறியிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆனால், திட்டமிட்டு அவரது உரையில் இது மறைக்கப்பட்டு விட்டது. முதல்வருக்கு இந்த செய்தி சென்று சேராமல் கூட இருந்திருக்கலாம். ஆனால், இந்த உரையை தயாரித்துக் கொடுத்த அதிகாரிகளுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு இது எப்படி மறந்து போனது என்பதுதான் வியப்பாக உள்ளது.
===நமது நிருபர்===