tamilnadu

img

ராஜஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை

ராஜஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை

அணை நீர் ஊருக்குள் புகுந்ததால் இரண்டாக பிளந்த விவசாய நிலங்கள்

வெள்ள நீரில் மிதக்கும் 600 கிராமங்கள் : 2000 கிராமங்கள் தொடர்பின்றி துண்டிப்பு

வெப்ப மண்டல பூமியான ராஜஸ்தா னில் கடந்த சில நாட்களாக பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. சில இடங்களில் மேகவெடிப்புக்கு நிகராக கனமழை புரட்டியெடுத்து வருகிறது.  இந்த கனமழையால் கோட்டா, பூண்டி, சவாய் மாதோபூர் மற்றும் ஜாலாவார் மாவட் டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அதே போல மாநிலம் முழு வதும் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரில் முற்றிலும் மூழ்கியுள்ளன. 2000க்கும் மேற் பட்ட கிராமங்களுடனான தொடர்பு துண்டிக் கப்பட்டுள்ளது. இதில் கோட்டா மாவட்டம் பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளது. அங்குள்ள டிகோட் துணைப்பிரிவில் மட்டும் 400க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதன் காரண மாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு களை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பிளந்த விவசாய நிலங்கள் தொடர் மழையால் மாநிலத்தின் முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் சுர்வால் அணை (சவாய் மாதோபூர் மாவட்டம்) நிரம்பி மறுகால் பாய்ந்ததால், ஜடாவாதா கிராமம் பெரும் அழிவைச் சந்தித் துள்ளது. அந்த கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளிகள் வழியாகப் பாய்ந்த வெள்ள நீர் சுமார் 2 கிமீ நீளத்திற்கும், 100 அடி அகலம் மற்றும் 55 அடி ஆழத்திற்கு பிரம்மாண்டமான பள்ளத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக வயல்களிலிருந்து பள்ளத்திற்குள் மழைநீர் பாய்ந்து நீர்வீழ்ச்சியைப் போல காட்சிய ளிக்கிறது. இதனால் ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு, அரு கிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை தொ டர்ந்தால் ஜடாவாதா கிராமத்தின் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 6 பேர் பலி கனமழை வெள்ளத்தால் நாகௌரின் பச்சக டாவில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் இறந்த னர். அதே போல  உதய்பூரின் குன்வாரி சுரங்கங்க ளில் நிரம்பிய நீரில் மூழ்கி 4 குழந்தைகள் இறந்த னர். இதன்மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் கன மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும்  மேற்பட்டோர் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகின. கனமழை நீடிக்கும் ஏற்கெனவே கனமழையால் ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளின் நிலைமை மோசமாக உள்ளது. இத்தகைய சூழலில், அடுத்த சில நாட்களுக்கு ராஜஸ் தானில் தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையுடன் கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.