துச்சேரியில் நிலுவை ஊதியம் கேட்டு உள்ளாட்சி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுச்சேரி, ஆக.25- உள்ளாட்சி ஊழியர்களுக்கு நிலுவைத் ஊதியத்தை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறை வேற்றவேண்டும், 33 மாத நிலுவைத் ஊதியத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி உள்ளாட்சி துறை அலுவ லகம் எதிரில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழுவின் ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன்,நிர்வாகிகள் சகாயராஜ், கலிய மூர்த்தி, வேளாங்கண்ணிதாசன், முருகை யன் உள்ளிட்ட திரளான உள்ளாட்சி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக அரசு ஏற்றுக் கொண்ட படி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான அரசாணையை வெளியிடக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.