கோவை, நீலகிரியில் பலத்த காற்றுடன் கனமழை
கோவை மற்றும் நீலகிரி மாவட் டங்களில் திங்களன்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய் தது. இதனால் பொதுமக்கள் மற் றும் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் கடந்த சில நாட் களாக வெயிலின் தாக்கம் அதி கரித்து காணப்பட்டது. குறிப்பாக திங்களன்று 92° பாரா மீட்டர் வெப்ப நிலை பதிவாகி இருந்தது. இந் நிலையில் திங்களன்று மாலை 3 மணி முதல் மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 5 மணியளவில் சிங்கா நல்லூர், ராமநாதபுரம், சுங்கம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் 30 நிமிடங் களுக்கு மேலாக பலத்த காற்று டன் கனமழை கொட்டி தீர்த்தது. சிங்காநல்லூர் நஞ்சப்பா நக ரில் பெரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதில் மின் கம்பமும் சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், ராமநாத புரம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு இருந்த சிறிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங் கள் சேதமடைந்தன. அவிநாசி சாலை, திருச்சி சாலை, ரயில் நிலையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். காலை யில் இருந்து வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், திடீரென பெய்த கனமழையால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். இதேபோன்று நீலகிரி மாவட் டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவியது. இத னால் தேயிலை சாகுபடி கடுமை யாக பாதிக்கப்பட்டது. வனப்பகுதி களில் மரங்கள் காய்ந்தும் செடி கொடிகள் கருகியும் வறட்சி ஏற் பட்டது. இந்நிலையில், கூடலூர், பந்த லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் பிற்பகல் வெயிலின் தாக்கம் குறைந்து கன மழை பெய்தது. இதனால் தாழ் வான பகுதிகள் மற்றும் சாலைக ளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி யது. கடந்த மூன்று மாதங்களுக் குப் பின் கூடலூரில் பெய்த கன மழை காரணமாக தேயிலை விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்