tamilnadu

img

‘சிக்கன நடவடிக்கை’ என்ற பெயரில் அரசு அடக்குமுறை - என்.குணசேகரன்

சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இன்றள வும் பல விளக்கங்கள், ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பெருமளவிலான ஆய்வுகள் சோசலிசத்தை தோல்வி அடைந்த ஒரு சமூக அமைப்பாக சித்தரிக்கின்றன. சோசலிச முறையை அவதூறு செய்யும் நோக்கத்துடன் அவை வெளியிடப்படு கின்றன. ஆனால் சோவியத் சரிவு ஏற்பட்ட  அதே 1990 - காலங்களில் முத லாளித்துவம் உலகம் முழுவதும் மேற் கொண்ட அநீதிகளைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. ‘சிக்கன நட வடிக்கை’ என்ற முதலாளித்துவத்தின் ஒரு தாக்குதலே பெரும் துயரங்களை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

சிக்கன சீரமைப்பு எனும் தாக்குதல்

1990களில் இருந்து, பெரும் பாலான ஆசிய நாடுகள் பல சமூக நலத் திட்டங்களை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்து நவதாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றின. அர சாங்கங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் ஓய்வூதியம் போன்ற அத்தியாவசிய சேவைகளை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றின. அனை வருக்கும் நலத்திட்டங்கள் என்பதற்கு பதிலாக குறைவான எண்ணிக்கை தீர்மானித்து அவர்களுக்கு மட்டும் சமூக நலத் திட்டங்கள் என்ற அணுகு முறையைப் பின்பற்றின. இதனால் அதிக அளவில் மக்கள் சமூகப் பாது காப்பிலிருந்து விலக்கப்பட்டனர். வணிகமயமாக்கப்பட்ட சுகாதார சேவை மற்றும் விரிவடையும் தனியார்  கல்வி காரணமாக குறைந்த வரு மானம்  கொண்ட மக்கள், சுகாதாரம் மற்றும் தரமான கல்வியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். உழைக்கும் மக்கள் தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூகப்பாதுகாப்புகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவான வரிக் கொள்கைகள் ஏழை, நடுத்தரக் குடும்பங்களை பாதித்துள்ளன. சீரமைப்பு, சீர்திருத்தம் எனும் பெயர்களில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள், மேற்கண்ட பாதையில் பயணித்தன. சர்வதேச நிதி நிறுவனம் (IMF), உலக வங்கி, ஜி20 நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களால் இத்தகைய சீரமைப்புகள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் நிதி மேலாண்மை நடவடிக்கை கள் ஊக்குவிக்கப்பட்டன. வளர்ச்சி யடையாத பல நாடுகள் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல் படுத்த நிர்பந்திக்கப்பட்டன. பெரும்பா லான ஆசிய நாடுகளின் அரசாங்கங் கள் 2021 முதல் தங்கள் பொதுச் செல வினங்களை வெகுவாகக் குறைத்தன. அவை சமூக நலத் திட்டங்களுக்கான நிதிகளை வெட்டிச் சுருக்கின.

இத்தகைய நிதி சிக்கன நட வடிக்கைகள் தனியார்மயமாக்கலை தீவிரப்படுத்தியது. வேலைகளை சமூகப்பாதுகாப்பற்றதாக மாற்றி, தொழிலாளர் உழைப்புச் சுரண்டலை அதிகப்படுத்தியது. இதனால், கோடிக் கணக்கான மக்கள் கடன் மற்றும் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். எந்த வொரு சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாரா துறையில் உள்ள தொழி லாளர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி னர். பெண்கள் மற்றும் குழந்தைகளும் இந்தக் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மத்திய ஆசிய நாடுகள் மற்றும்  மத்திய கிழக்கு நாடுகள் 2021 இல் செலவினங்களை மிகவும் குறைத் தன. தெற்காசியப் பிராந்தியத்தின் 8இல் 5 நாடுகளில் பட்ஜெட் வெட்டுக்கள் அதி கமாக இருந்தன. இந்த நாடுகள் இன் னும் அந்தப் போக்கை மாற்றவில்லை.  பிலிப்பைன்ஸில் சுகாதாரம் மற்றும் கல்வியின் தனியார்மயமாக்கல், பல  சமூக நலத் திட்டங்களுக்கான அர சாங்க செலவினத்தைக் குறைத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை வீழ்ச்சி அடையச் செய்துள் ளது. தென் கொரியா, கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக, தொழிலாளர் பாது காப்பு ஏற்பாடுகளை அகற்றியது. இவை இந்த நாடுகளில் சமத்துவ மின்மையையும் அதிகரித்தது.  இந்தோனேசியா தனது நலத்திட்டங் களை சுருக்கி, பண பரிமாற்றங்களை அறிமுகப்படுத்தியது. அதாவது நேரடி யாக ஒரு பகுதி மக்களுக்கு பணம் அளித்து மற்ற நலத்திட்டங்களை விலக்கிக் கொள்வது என்கிற நடை முறை பின்பற்றப்பட்டது. தாய்லாந்தில் நடைபெற்று வரும் பண-பரிமாற்ற திட்டம் தாய்லாந்தின் தேசிய பொரு ளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன் சிலால் (NESDC) விமர்சிக்கப்பட்டது. தாய்லாந்தின் ஏழைகளில் பாதிப் பேர் பண உதவியைப் பெறவில்லை என்றும், அதைப் பெறுபவர்களில் 90% பேர் தேசிய வறுமைக் கோட்டிற்குக் கீழ் இல்லை என்றும் அந்த அரசு சார் அமைப்பே அம்பலப்படுத்தியது.

இலங்கையின் அவலம்

இலங்கையில், சுமார் 2 கோடியே 20 லட்சம் மக்கள்தொகையில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் நவ தாராளமயம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டனர். இலங்கையின் தற்போதைய பொருளாதார அரசியல் நெருக்கடிகள் நிச்சயமாக ஆளும் வர்க்கத்தினரின் நவதாராளமயக் கொள்கைகளின் விளைவாகும். இலங்கையின் சமூக நலத் திட்டங்கள் முற்றிலும் சிதைந்து விட்டன. தற்போது வங்காளதேசமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. கடந்த ஆண்டு, பன்னாட்டு நிதி நிறு வனத்தின் (ஐஎம்எப்) நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில், இலங்கை அரசாங்கம் ஓய்வூதிய நிதிகளைப் பயன்படுத்தி உள்நாட்டு கடனை மறுசீரமைக்க முடிவு செய்தது. இதனால், ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்புகளில் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை குறிப்பிட்டு, 80க்கும் மேற்பட்ட இலங்கை அமைப்புகள் மற் றும் தொழிற்சங்கங்கள் ஐஎம்எப்புக்கு கண்டனக் கடிதம் எழுதின.  ஐ.எம்.எப் தனது பொருளாதார பரிந்துரைகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை நசுக்கி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டனர்: “உங்களது (IMF) கடன் மறுசீர மைப்புத் திட்டம் எங்கள் பொருளாதா ரத்தை இயக்கி வருகிறது; எங்கள் சமூ கத்தில் மதிப்பை உருவாக்கும் இலங்கை உழைக்கும் மக்களை அது  முடமாக்கிவிட்டது. ஐஎம்எப் தலையீடு களின் போது செயல்படுத்தப்பட்ட முந்தைய சீர்திருத்தங்களின் எதிர் மறையான விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், எங்கள் மீது மேலும் மேலும் திணிக்கப்பட்ட சீர்திருத் தங்கள் எங்கள் பொருளாதாரத்தை நசுக்கிவிட்டன.” ஏழை முதலாளித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியம் ஏற்படுத்தி வரும் கடுமை யான பொருளாதார தாக்குதல் இந்தக் கடிதத்தில் வெளிப்படுகிறது.

பாலின சமத்துவமின்மை

இந்த விளைவுகள் இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச நிதி நிறுவனங் களின் கட்டளைகளுக்கு அடி பணிந்துள்ள முதலாளித்துவ நாடுகள் அனைத்துக்கும் பொருந்தும். சர்வதேச தொழிலாளர் அமைப் பின் (ILO) ஆய்வுகளின்படி, பொருளா தார நிலைத்தன்மையின் பெயரால் பின்பற்றப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் மீது பொருளாதார அழிவை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நடவடிக்கைகள், குறிப்பாக, ஆசியாவில் குறைந்த வருமானம் கொண்ட பெண்களின் வாழ் நிலைமை களை மோசமாக்கி உள்ளது. அத்துடன், சமூகத்தில் அவர்களின் ஒடுக்கப் பட்ட மற்றும் கீழான நிலைமைகளை மாற்றம் எதுவும் ஏற்படுத்தாமல் நிலை நிறுத்தி வருகிறது.  “ஆசிய அதிசயங்கள்” என்று கூறி வெற்றிகரமான ஆசியப் பொருளாதாரங்கள் என்று அழைக்கப் படும் அனைத்து நாடுகளிலும், பெண்கள் பாதுகாப்பற்ற மற்றும் குறைந்த ஊதியம் கொடுக்கப்படும் முறைசாரா வேலைகளில் பணிய மர்த்தப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.  தெற்காசியாவில் சுமார் 95% பெண்கள் முறைசாரா வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தொழி லாளர் சட்டப் பாதுகாப்போ சமூக நலன்களோ இல்லை. மேலும், அதி கரித்து வரும் இடப்பெயர்ச்சி அவர்களின் குடும்ப கட்டமைப்பை உடைத்துக் கொண்டிருக்கிறது. அரசு  நிதியுதவி பெறும் சேவைகள் சுருங்கு வது பெண்களை மேலும் வறுமைக் குள்ளாக்கி, பாலின சமத்துவமின்மை யை அதிகரித்துள்ளது.

வேலையின்மைக்கான நிவாரணம்

இளைஞர்களையும் இளம் பெண் களையும் பாதித்த சிக்கன நடவடிக்கை களில் ஒன்று வேலையின்மைக்கான நிவாரணத்திற்கு ஒதுக்கப்படுகிற குறைந்தளவு நிதியாகும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2021 ஆம்  ஆண்டின் அறிக்கையில், வேலை யின்மைக்கான பாதுகாப்பு சமூக பாது காப்பில் மிகக் குறைவாக செயல் படுத்தப்பட்ட பிரிவாக இருப்பதாக தெரி வித்தது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வேலையின்மை 4.2 சதவீதமாக உள்ளது, அதாவது 2024 இல் எட்டு  கோடியே 78 லட்சம் பேர் வேலை யின்றி இருக்கின்றனர். இந்நிலையில், வேலையில்லாக் கால நிவாரணம் மிக  முக்கியமான தேவையாக எழுந்துள் ளது. எனினும் இதில் தொடர்ந்து ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது.  மக்கள் மீது திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், பல ஆசிய நாடுகளில் வறுமை, சமத்துவமின்மை பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்தி யுள்ளன. இந்தியாவிலும் பாஜக அர சின் சிக்கன நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.  உழைக்கும் மக்கள் நவதாராள மயத்திற்கு எதிராக தொடர்ந்து ஒன்று பட்டு குரல் எழுப்பி வருகின்றனர். உள் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு திட்ட மிடும்போது, சமூக நலன் மற்றும் பல வீனமான பிரிவினரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க ஆளும் வர்க்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும். உழைக்கும் மக்களின் ஒற்றுமையே இதனை சாதிக்கும். உண்மையில், முதலாளித்துவம் தான் பெரும் தோல்வியை சந்தித்திருக் கிறது. மக்கள் நலனே முன்னுரிமை என அன்றைய சோவியத் யூனியன் மேற் கொண்ட மக்கள் நலத் திட்டங்கள் போன்று இதுவரை எந்த முதலாளித் துவ அரசும் மேற்கொண்டதில்லை. பல பின்னடைவுகளை சந்தித்தாலும், சோசலிசமே உயரிய மாற்று சமூக அமைப்பு என்பதுதான் வரலாறு.