tamilnadu

img

காசாவில் எந்த வடிவத்திலும் இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது

நியூயார்க்,பிப்.6- சர்வதேசச் சட்டத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். காசாவில் எந்த வடிவத்திலும்  இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனர்களிடம் இருந்து பிரிக்க முடி யாத உரிமைகள் அவர்களுக்கு கிடைக்காத தூரத்திற்கு சென்றுவிட்டதை நாங்கள் பார்க்கின் றோம். ஒரு முழு இனமும்  மனிதநேயமற்ற, மிகக் கொடூரமான முறையில்  நடத்தப்படுவதையும் நாங்கள் பார்க்கின்றோம் என பாலஸ்தீன மக்க ளின்  உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான குழு வின் கூட்டத்தில் பேசிய போது அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு தேடுகி றோம் என நாம் அப்பிரச்சனையை மேலும் மோசமாக்கிவிடக் கூடாது எனவும் குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்தார். சர்வதேசச் சட்டத்தை உறுதியாகப் பின்பற்றி நடப்பது  இன்றியமையா தது. எந்த விதமான இன அழிப்பு நடவடிக்கையை யும் தவிர்ப்பது முக்கியம்.கிழக்கு ஜெருசலேம்உட்பட மேற்குக் கரையில் பாலஸ்தீனர்களுக்கு எதி ராக அதிகரித்து வரும் நிலைமை குறித்து  கவலையை தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,  காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்ற வேண்டும். பிறகு காசாவை ஆக்கிரமித்து மீண்டும் கட்டமைத்து அதனை அமெரிக்க பயன்படுத்திக் கொள்ளும் என பேசி இருந்தார். இவ்வாறு டிரம்ப் பேசிய மறுதினம் குட்டரெஸ் இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் ​​தற்போதைய இடைக்கால போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை முழு போர் நிறுத்தமாக மாற்ற வேண்டும். அனைத்து பணயக்கைதிகளையும் தாமதமின்றி விடுவிக்க வேண்டும். நாம் இனி மேலும்  மரணத்திற்கும் அழிவுக்கும் திரும்ப முடி யாது. இரு நாட்டுக் கொள்கையை அமலுக்கு கொண்டு வருவதே தீர்வாக அமையும் என குட்டரெஸ் தெரிவித்தார்.வன்முறை நிறுத்தப்பட வேண்டும், சர்வதேசச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும், இந்த மோசமான நிலைக்கு காரணமா னவர்கள்  பொறுப்பேற்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.