பொது வேலைநிறுத்தம் சம்பளம் பிடித்தம்; நடவடிக்கை என மிரட்டல்
சென்னை, ஜூலை 8 - மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதனன்று (ஜூலை 9) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதன்கிழமை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் சம்பளப் பிடித்தம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, ஜூலை 8 - சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் சிவகங்கையைச் சேர்ந்த தவசிலிங்கம் (42) என்பவரை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர்.