tamilnadu

img

காந்தி கிராம கல்வி நிறுவனத்தை மத்திய பல்கலை.யாக அறிவிக்க வேண்டும்!

காந்தி கிராம கல்வி நிறுவனத்தை  மத்திய பல்கலை.யாக அறிவிக்க வேண்டும்!

பெயர் சூட்டலில் கூட தென்னிந்திய சாதனையாளர்களைப் புறக்கணிப்பதா?

காந்தி கிராம கிராமப்புற நிறுவனத்தை கிராமப்புற ஆய்வுகளுக்கான மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு நடை பெற்று வரும் நிலையில், மக்களவை யில் புதன்கிழமையன்று பிற்பகல் விவா தத்தில் பங்கேற்று ஆர். சச்சிதானந்தம் பேசியதாவது:

வர்கீஸ் குரியன் பெயர் எங்கே?

2025-ஆம் ஆண்டு திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழக சட்ட முன்வடிவினை நம் உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிமுகப் படுத்தி இருக்கிறார். திரிபுவன் தாஸ் படேல் என்கிற நிறுவனரின் நினைவாக இவ்வாறு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆயினும் நிறுவன செயலாளரும், இந்தி யாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவருமான வர்கீஸ் குரியன் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட வில்லை. ஏனெனில் அவர் ஒரு தென்னிந்தியர் என்பதேயாகும். கூட்டுறவுத் துறை என்பது மாநிலங்களின் பட்டியலில் வருகிறது. எனினும் மோடி அரசாங்கம் புதிய துறை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இத்துறையை அது அமித் ஷா-விற்காகவே உருவாக்கி இருக்கிறது. ஆயினும் கூட்டுறவு கூட்டாட்சி (Co-operative federalism) நம்முடைய கூட்டு றவு அமைச்சராலும், மோடி அர சாங்கத்தாலும் பின்பற்றப்படவில்லை.   மாநிலங்கள் மற்றும் மாநிலப் பல்கலைக் கழகங்கள் மூலமாக உயர் கல்வியின் தரத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக நிதி ஆயோக்கின் அறிக்கை  காலத்தே வந்திருக்கிறது. நிதி ஆயோ க்கின் அறிக்கைக்கு எதிராக, நம் ஒன்றிய அரசாங்கமானது ஒன்றியப் பல்கலைக் கழகங்களை மட்டுமே வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மாநிலப் பல்கலைக் கழகங்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கூட்டுறவின் பிறப்பிடமே தென்னிந்தியா தான்

கூட்டுறவு இயக்கம் இந்தியாவில் விவசாயம், வங்கி மற்றும் வீட்டுவசதி ஆகிய துறைகளில் முக்கியமான பங்கினை ஆற்றி வருகிறது. 1904-இல் பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னை பிராந்தியத்தில் கூட்டுறவு ஆட்சியை அமைத்தது. முதல் கூட்டுறவு சங்கம் கர்நாடகாவில் அமைக்கப்பட்டது. கூட்டுறவு இயக்கத்தின் பிறப்பிடம் தென் இந்தியாவாகும். எனவே, நம் ஒன்றிய அரசாங்கம் மத்தியப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடத்தை தென் இந்தியாவிலிருந்து தேர்வு செய்திட வேண்டும். கேரளம், கூட்டுறவு இயக்கத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாகும். கூட்டுறவு சட்டத்தின் மிகவும் அடிப்படையான அம்சம் என்பது ஒருங்கிணைந்த முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வது என்பதாகும்.

டிஜிட்டல் மயத்துடனான முன்மாதிரி கேரளம்

 கேரளத்தில் தேர்வுக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டுள்ள இந்தச் சட்ட மானது, முதலீட்டின் மீது அரசாங்கத்தின் உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கேரள கூட்டுறவு முதலீடு உத்தரவாத நிதி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கங்களில் முதலீட்டுக்கான காப்பீடு இரண்டு லட்சம் ரூபாய்களி லிருந்து ஐந்து லட்சம் ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு சங்கங்களின் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய வற்றை உறுதி செய்வதற்கேற்ற விதத்தில் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டி ருக்கிறது. அதன் நவீனமயமாக்கல் இயக்கத்தின் ஒரு பகுதியாக, முக்கிய வங்கி செயல்முறைகளை ஒருங்கி ணைத்து அனைத்து டிஜிட்டல் வங்கி  சேவைகளையும் வழங்க ஒருங்கி ணைந்த அமைப்புகளின் முன்னணி வழங்குநரான விப்ரோவுடன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.  

தமிழகத்தில் கூட்டுறவு துறைக்கு கல்லூரி

பினாக்கிள் (Finacle) மென்பொரு ளைப் பயன்படுத்தும் முதல் வங்கி, கேரளா வங்கியாகும். இது ஆலப்புழா, வயநாடு மற்றும் கோட்டயம் தவிர பிற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடி காலங்களில் குடும்பங்க ளுக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள திட்டமாக கூட்டுறவுத் துறை ‘ஒரு குடும்பத்திற்கு ஒரு வைப்பு நிதி’ என்ற புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டில், திண்டுக்கல்லில் கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான கல்லூரி உள்ளது. ஒவ்வொரு மாவட்ட  கூட்டுறவுத் துறையும் பட்டய (டிப்ளோமா)  படிப்புகளை நடத்துகிறது, அதிலிருந்து தான் அவர்களுக்குத் தேவையான ஊழி யர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

புகழ்பெற்ற காந்தி கிராம  கல்வி நிறுவனம்

கிராம மக்களுக்கு உயர்கல்வியை நெருக்கமாகக் கொண்டு வருவதற்காக காந்தி கிராம கிராமப்புற உயர்கல்வி பல்கலைக்கழகம் 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டில்,  கல்வி அமைச்சகத்தால் 11 கிராமப்புற நிறுவனங்கள் நிறுவப்பட்டன. 11 நிறுவனங்களில், காந்தி கிராம கிராமப்புற பல்கலைக்கழகம் மட்டுமே உயிருடன் எஞ்சியிருக்கும் ஒரே நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கிராமப்புற மேம்பாட்டில் நிபுணத்துவம் பெற்றது, மேலும் பஞ்சாயத்து ராஜ் குறித்த சிறப்பு ஆராய்ச்சியையும் அரசியல் அறிவியல் துறை மூலம் நடத்தி வருகிறது. கிராமப்புற தொழில்துறை மேலா ண்மை, பி.டெக் (சிவில்), கூட்டுறவு வேளாண்மை, சுகாதாரம், வீட்டு அறி வியல் போன்ற பல்வேறு படிப்புகள், வழக்கமான கலை மற்றும் அறிவியல் பாடங்களுடன் சேர்த்து, நிகர்நிலைப் பல் கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்றன. எனவே, இந்திய அரசு காந்தி கிராம கிராமப்புற நிறுவனத்தை கிராமப்புற ஆய்வுகளுக்கான மத்திய பல்கலைக் கழகமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு நான் இந்த திரிபுவன் கூட்டுறவு பல்கலைக் கழக சட்டமுன்வடிவை எங்கள் கட்சியின் சார்பாக எதிர்க்கிறேன்.இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் பேசினார்