சபரிமலை தங்க திருட்டு வழக்கு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் கைது
சபரிமலை தங்க திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு தலைமையகத்தில் விசாரணை நடத்திய பின்னர் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அவரை கைது செய்தது. விசாரணை சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது. சபரிமலை சன்னிதான வாசல் படிகளில் இருந்து தங்கம் திருடி யதில் பத்மகுமாருக்கு பங்கு இருப்பது விசாரணைக் குழுவால் கண்டறியப் பட்டது. 2019இல் தேவசம் போர்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக பத்மகுமார் சேர்க்கப்பட்டார். முன்ன தாக, முன்னாள் ஆணையரும் தேவசம் போர்டு தலைவருமான என்.வாசுவும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார். முதல் குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போற்றிக்கு பத்மகுமார் உதவியதாகவும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. தங்க திருட்டு வழக்கு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
