கேரளத்தில் உயர்த்தப்பட்ட நலத்திட்ட ஓய்வூதியம் 63,77,935 பயனாளிகளுக்கு தலா ரூ.3,600
திருவனந்தபுரம் கேரளத்தில் சமூக பாது காப்பு மற்றும் நலத் ்திட்ட ஓய்வூதிய பயனா ளிகளுக்கு இரண்டு மாத ஓய்வூதிய விநியோகம் தொடங்கி யுள்ளது. இந்த முறை, ஒவ்வொரு வரும் ரூ.3,600 பெறுகிறார்கள். முந்தைய நிலுவைத் தொகை யான ரூ.1,600 மற்றும் ரூ.400 உயர்வுடன் நவம்பர் மாத தவணை யான ரூ.2,000 ஆகியவை விநி யோகிக்கப்படுகிறது. இதன் மூலம், ஓய்வூதிய நிலுவைத் தொகை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31 அன்று நிதித்துறை இதற்காக ரூ.1,864 கோடியை அனுமதித்திருந்தது. கேரளத்தில் 2016இல் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பொ றுப்பேற்றபோது பல்வேறு சமூக நலத்திட்ட ஓய்வூதியம் ரூ.600 ஆக இருந்தது. 2016 ஜுன் மாதம் முதல் அதை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது. அதோடு 18 மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் எல்டிஎப் அரசு படிப்படியாக செலுத்தியது. மேலும் ஆண்டுக்கு நூறு ரூபாய் உயர்வையும் வழங்கியது. அதன் படி ரூ.1600 ஆக ஓய்வூதியம் உயர்ந் தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வருடாந்திர உயர்வு தடைபட்டது. இந்நிலையில், கேரளம் பிறந்த நாளையொட்டி (நவ.1) முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் ஓய்வூதி யம் ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப் பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு 5 லட்சம் விதவைகள் உட்பட 28 லட்சம்பேர் பெற்றுவந்த ஓய்வூதியம் தற்போது 63,77,935 பயனாளிகளுக்கு கிடைக்கிறது. பழைய நிலுவைத்தொகை 1,600 உடன் புதிய பென்சன் தொகை ரூ.2,000 என ஒவ்வொருவருக்கும் ரூ.3,600 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விநியோகம் நவ.20 வியாழனன்று தொடங்கியது. ஏழை எளிய பயனாளிகளை இது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
