தில்லியில் மேலும் மோசமாகும் காற்றின் தரம்
நாட்டின் தலைநகர் தில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து ஏழா வது நாளாக வியாழக்கிழமை யும் “மிகவும் மோசமான (Very Poor)” பிரிவிலேயே நீடித்தது. வியாழனன்று தில்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 398 ஆகப் பதி வாகியுள்ளது. மத்திய மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் (CPCB) “சமீர்” செயலி மூலம் கிடைத்த தரவுகளின்படி, தில்லியில் உள்ள 40 கண்காணிப்பு நிலையங்களில் 21 நிலையங்களில் காற்றின் தரம் “தீவிரமான (Severe)” பிரிவில் (AQI 400-க்கு மேல்) பதிவா கியுள்ளது. தில்லி தொழில்நுட்பப் பல்கலைக் பழகம், புராடி, சாந்தினி சௌக், ஆனந்த் விஹார், முண்ட்கா, ஓக்லா, பவானா, வசீர்பூர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400-க்கும் அதிகமாகப் பதிவானது. இந்தத் தொடர்ச்சியான மோச மான காற்றுத் தரம் காரணமாக, தில்லி வாசிகள் சுவாசம் சார்ந்த தீவிர சுகாதா ரப் பிரச்சனைகளை எதிர்கொண்டு மருத்துவமனைக்கு சென்று வரு கின்றனர்.
