tamilnadu

அனைத்து நிலைகளிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர்!

சென்னை, ஜன. 31 - வட சென்னையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு சட்டப்பேரவையில் ரூ.1,000 கோடி முதலில் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், தற்போது ரூ. 6,350 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன” என்றார். தலைவர்களுக்கெல்லாம்  தலைவர் தந்தை பெரியார் 

அப்போது, பெரியார் குறித்து அவதூறு பரப்புபவர்கள் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “பெரியாரை மரியாதைக் குறைவாக பேசக் கூடியவர்களுக்கு, நான் மரியாதை கொடுக்கத் தயாராக இல்லை. எங்கள் தலைவர்களுக்கெல்லாம் தலைவர் பெரியார். எனவே, அவதூறுகளை பெரிதுபடுத்தவும், பொருட்படுத்தவும் விரும்பவில்லை” என்றார். ஆளுநர் குறித்த கேள்விக்கு, “அனைத்து  நிலைகளிலும் அரசுக்கு எதிராக தான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள், இந்த ஆட்சியின் மதிப்பைக் கூட்டிக்கொண்டு தான் இருக்கிறது. அவரின் செயல்கள் தொடர்வது தான் நாங்களும் விரும்புகிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.