இராமநாதபுரம், நவ.12- இலங்கை கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீன வர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டு சிறைகளில் அடைத்துள்ளனர். இவர்களில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 65 பேர், சமீபத்தில் சிறை பிடிக்கப்பட்ட 35 பேர் என 100 பேர் இலங்கை சிறை யில் உள்ளனர். இவர்களை படகுகளுடன் விடு விக்கக் கோரி ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இலங்கை சிறை யில் உள்ள இராமேஸ்வரம், பாம்பன், புதுக்கோட்டை மீனவர்களையும், சிறை பிடித்துச் சென்ற நாட்டுப் படகுகள், விசைப்படகுகளையும் விடு விக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் பாலத்தை செவ் வாயன்று முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தை தொடர்ந்து பாம் பன் பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மீனவர்களிடம் இராமநாதபுரம் மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபாவதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எட்டப் படவில்லை. பின்னர் இராமநாத புரம் எஸ்பி சந்தீஷ், வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை யில் சமரசம் ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. முற்றுகை, சாலை மறியல் போராட்டம் காரணமாக இராமேஸ் வரம் - மண்டபம் இடையே போக்கு வரத்து 2 மணி நேரம் பாதித்தது.