tamilnadu

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ கேட்டுப் போராட்டம் இடைநிலை ஆசிரியர் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்க!

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ கேட்டுப் போராட்டம் இடைநிலை ஆசிரியர் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்க!\

சென்னை, டிச. 29 - இடைநிலை ஆசிரியர்கள் போராட் டம் நடத்தி வரும் நிலையில், அவர் களின் கோரிக்கைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் நான்காவது நாளாகப் போராடி வருகின்றனர்.  2009 மே 31 வரை நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2009  ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு நிய மனம் பெற்ற இடைநிலை ஆசிரியர் களுக்கும் இடையே நிலவும்  ஊதிய முரண்பாட்டைக் களைந்திட கோரி இந்த போராட்டம் நடைபெற்று வரு கிறது. அடிப்படை ஊதியத்தில் மட்டும் ரூ.3170 குறைவாக பெறும் சூழல் 2009 மே 31க்கு முன்னர் பணியில் சேர்ந்த வர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 16 ஆண்டு களில்  இழப்பு இன்னும் பல மடங்கு களாக உள்ளன. ஒரே கல்வித் தகுதி, ஒரே பணியை ஆற்றி வரும் இடைநிலை ஆசிரியர் களுக்கிடையே இத்தகைய முரண் பாடு தொடர்வது பொருத்தமல்ல; இயற் கை நீதிக்கும் எதிரானது. இவர்களின் போராட்டம் காவல்துறையின் அடக்கு முறைக்கு ஆளாவதும் கைது நட வடிக்கைகளுக்கு உள்ளாவதும் சரியல்ல. இத்தகைய ஊதிய முரண்பாடு கள் களையப்படும் என்று தெரிவித்தி ருந்த நிலையிலும், எதுவும் நிறை வேற்றப்படாததாலேயே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். சமவேலைக்கு, சம ஊதியம் என்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செய ற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.