tamilnadu

img

பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணி நவ.13 இல் தொடக்கம்

இராமேஸ்வரம், நவ.6-  பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணி வரும் 13 ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாம்பன் கடலில் கடந்த 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த  புதிய ரயில் பாலம், பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து,  பல்வேறு ஆய்வுகள், ரயில் சோதனை ஓட்டங்கள் நடைபெற்றது.  இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி பாம்பன் புதிய  ரயில் பாலத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டா ரத்தில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாது காப்பு ஆணையம் வரும் 13, 14 ஆகிய 2 நாட்கள், பாம்பன் புதிய  ரயில் பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு செய்யவுள்ளனர். அதனை யடுத்து, பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி வழங்கப்படும் என  ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.  திறப்பு விழாவிற்கு தயாராகி வரும் புதிய ரயில் பாலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அப்துல் கலாமின் பெயரை பாலத் துக்கு சூட்ட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தொ டர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பிரதமர் மோடி திறக்கவுள்ள புதிய ரயில் பாலத்திற்கு ‘கலாம் சேது’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக ரயில்வே உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.