தேர்தலுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி மூலம் 1 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புக!
வாலிபர் சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் சென்னை, டிச. 19 - தேர்தலுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி 1 லட்சம் காலிப் பணி யிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் வெள்ளி யன்று (டிச. 19) மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இத னொரு பகுதியாக வடசென்னை மாவட்டக் குழு சார்பில் தங்கசாலை ஐடிஐ அருகே தலைவர் அ.விஜய் தலைமையில் போரா ட்டம் நடைபெற்றது. போராட்டத்தை துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் பேசினார். நிரந்தர பணியிடங்களை ஏற்படுத்த என்ன தயக்கம் அப்போது அவர் கூறுகையில், இந்தி யாவில் கல்வி வளர்ச்சி தமிழகத்திலும், கேரளத்திலும் தான் அதிகம். தமிழ்நாட்டில் 100க்கு 99 சதவிகிதம் மாண வர்களுக்கு கல்வி கிடைக்கிறது. பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கக்கூடிய நிலை இன்று உருவாகி யுள்ளது. ஆனால் படித்து முடித்தவர் களுக்கு வேலை கிடைக்கிறதா என்றால் இல்லை. தமிழ்நாட்டில் மருத்துவத்துறை யில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் 1 லட்சம் செவிலியர்கள் வேலை செய்கிறார்கள். இந்தப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றுவதில் அரசுக்கு என்ன தயக்கம். புதிய மருத்துவமனைகளில் ஒப்பந்த பணியாளர்கள் கொளத்தூர் பெரியார் நகரில் அரசு மருத்துவமனை கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்ட புதிய பணி யிடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 105 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள். மீதி 245 பேரும் ஒப்பந்தப் பணியாளர்கள். ஒரு பக்கம் படித்து முடித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரு கிறது. கடந்த ஜூலை மாதம் குரூப் - 4 தேர்வு நடந்து முடிந்தது. 3,982 பணி யிடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து 13 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்து, 11 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். அதில் வெறும் 3,900 பேர் மட்டுமே அரசு பணிக்கு எடுக்கப்பட்டனர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை அரசு அலுவலகத்துக்கு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு சென்றால் அங்கு இருக்கும் அடிப்படையான பணிகளை செய்யக்கூடிய எல்லோரும் குரூப் - 4 பணியாளர்கள்தான். ஆனால் அந்த பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதி யின் கீழ் ஒன்றரை ஆண்டுக்குள் 75,000 பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்புவோம் என முத லமைச்சர் அறிவித்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 70,000 பணி யிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. கல்வித்துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் 2025ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் இளைஞர்களின் எண்ணி க்கை 70 லட்சம் பேர். அப்படி இருக்கும் போது வெறும் 70,000 பணியிடங்களை மட்டும் நிரப்பினால் என்ன நியாயம்? பள்ளிக் கல்வித்துறையில் ஏறக்குறைய 1 லட்சத்து 5 ஆயிரம் காலிப் பணியிடங்கள் (ஆசிரியர் பணியிடங்கள் உட்பட), உயர் கல்வித்துறையில் 22,000 காலிப் பணி யிடங்கள் உள்ளன. சென்னை பல்கலைக் கழகத்தில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவேதான் கல்வித்துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கோருகிறோம். மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலிப் பணியிடங்கள் போக்குவரத்துத் துறையில் 35,000 காலிப் பணியிடங்கள், மின்சார வாரியத்தில் 60,000 காலிப் பணி யிடங்கள் உள்ளன. இப்படி துறை வாரி யாக குறைந்தபட்சம் 20,000 பேரை நிரப்பினால் கூட உடனடியாக 2.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப முடியும். கடந்த 10 நாட்களுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு நடை பெறும் என்று தெரிவித்துள்ளது. இத னால் (வயது கடந்து விடும்) லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு பறிபோகும். 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் டிஎன்பி எஸ்சி தேர்வுக்காக படித்து படித்து வாழ்க்கையை தொலைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறார் கள். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அந்த தேர்வை நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும் என்று எஸ். கார்த்திக் கேட்டுக் கொண்டார். பங்கேற்றோர் வாலிபர் சங்கத்தின் மாநில முன்னாள் செயலாளர் எஸ்.கே. மகேந்தி ரன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் ஜி. நித்யராஜ், செயற்குழு உறுப்பினர்கள் அபிராமி, புவியரசி, கார்த்திக், கோபி, சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம். ராஜ்குமார், வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி எஸ்.ஏ. வெற்றிராஜன் உள்ளிட்ட கல்வியாளர்கள், ஆசிரியர்கள் வாழ்த்திப் பேசினர். முன்னதாக அர்ஜுன் வரவேற்றார். ஜூகைப் நன்றி கூறினார்.
