tamilnadu

தொழிலாளர் வர்க்கம் மீதான அறிவிக்கப்படாத யுத்தத்திற்கு எதிராக பிப். 12 - அகில இந்திய வேலை நிறுத்தம்! மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்

தொழிலாளர் வர்க்கம் மீதான அறிவிக்கப்படாத யுத்தத்திற்கு எதிராக  பிப். 12 - அகில இந்திய வேலை நிறுத்தம்! மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல்

புதுதில்லி, டிச. 23 - மிகவும் கொடூரமான தொழி லாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும், மக்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் மீது ஒன்றிய அரசு நடத்தும் பன்முகத் தாக்குதலுக்கு எதிராகவும் 2026 பிப்ரவரி 12 அன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத் திற்கு, மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் தொடர் பான, முறையான அறிவிப்பு, 2026 ஜனவரி 9 அன்று புதுதில்லியின் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் பவனில் நடைபெறவுள்ள தேசிய தொழிலா ளர் சிறப்பு மாநாட்டில் வெளியிடப் பட உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் கூட்டமைப்புகள் / சங்கங் களின் கூட்டு மேடை, 2025 டிசம்பர்  22 அன்று நடைபெற்றது. அப்போது,  அண்மைக் காலத்தில் நாடாளுமன்றத் திற்கு உள்ளேயும் வெளியேயும் மோடி அரசாங்கம் தொழிலாளர் வர்க்கம் மீது நடத்திய அப்பட்ட மான தாக்குதல்களுக்கு இந்த கூட்டம் ஆழ்ந்த கவலையையும் வேதனை யையும் வெளிப்படுத்தியது. அணுசக்தித் துறையில் தனியார் ஆபத்தானது அதிக ஆபத்தான அணுசக்தி உற்பத்தித் துறையில், லாப நோக்கத் துடன் செயல்படும் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நுழை வதற்கு மோடி அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக “இந்தியா வை மாற்றுவதற்கான அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டம் (SHANTI)” என்ற  ஒன்றைக் கொண்டு வந்துள்ளது.  அதில், அணுசக்தி உற்பத்தியில் விபத்துகள்/பேரழிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான உபகரணங் களை வழங்கும் வெளிநாட்டு மற்றும் தேசிய விநியோகஸ்தர்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளது. இது நிச்சயமாக நமது நாட்டின் அணுசக்தி பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான ஒரு தாக்குதலாகும். விவசாயத் தொழிலாளர்க்கு எதிரான ‘விபி ஜி ராம் ஜி’  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் - 2025, விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் (விபி ஜி ராம் ஜி) என்ற பெயரில் புதிய சட்ட மாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் கடுமையான வேலையின்மையால் தவிக்கும் இந்த நேரத்தில், இந்த  புதிய சட்டம் உரிமைகள் அடிப்படை யிலான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை ஒழித்துக் கட்டி, வேலை அளிப்பதை ஒன்றிய அர சாங்கத்தின் விருப்பத்திற்கு உட்பட்ட தாக மாற்றி, 40 சதவிகித நிதிச் சுமை யையும் மாநிலங்கள் மீது சுமத்து கிறது. அத்துடன், அறுவடைக் காலத்தில் இந்தச் சட்டம் நடை முறைப்படுத்தப்படாது என்று அறி வித்து, நிலப்பிரபுக்களுக்கு உழைப்பு சக்தி மலிவாக கிடைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்கிறது. வரிசை கட்டி காத்திருக்கும் பேரழிவுச் சட்டமுன்வடிவுகள் அதேபோல இன்சூரன்ஸ் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் கை யகப்படுத்தும் உரிமையை வழங்கு கிறது. ஒன்றிய அரசு, விக்சித் பாரத் சிக்ஷா அதிஸ்தான் -2025 என்ற சட்ட முன்வடிவையும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்துள்ளது. இருப்பினும் இந்த அமர்வில் அதை நிறைவேற்ற முடிய வில்லை. வரைவு விதை சட்டமுன்வடிவை யும், வரைவு 2025 மின்சார (திருத்த) சட்டமுன்வடிவையும் மோடி அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், அவை விவசாயம், உள்நாட்டு மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவன மின் நுகர்வோர் மற்றும் நமது நாட்டின் பொது மின்சாரத் துறைக்கு பேரழிவை ஏற்படுத்திடும். ஆரவல்லி மலை வளத்தையும் அழிப்பதற்கு திட்டம் வட இந்தியாவின் தார் பாலைவனம் விரிவடைவதிலிருந்து வட இந்தியாவைப் பாதுகாத்து வரும் ஆரவல்லி மலைகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பகுதியை அழிக்க அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் ஆபத்தான உத்தரவு, வட இந்தியாவின் தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடி மற்றும் தில்லி - என்சிஆர்-இல் நிலவும் தாங்க  முடியாத மாசுபாடு ஆகியவற்றை ஒன்றிய தொழிற்சங்கங்கள் தீவிரமாகக் கவனத்தில் கொண்டன. இந்த அனைத்து கொடூரமான தாக்குதல் களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மற்றும் இயக்கங்களுக்கு, மத்திய தொழிற்சங்கங்கள் தமது வலுவான ஒற்றுமைக் கரத்தை நீட்டுகிறது. மின் ஊழியர்கள், விவசாயிகளும் போராட்டக் களத்திற்கு தயார் பொது வேலைநிறுத்தத்திற்கு நிபந்தனை யற்ற ஆதரவளித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா வுக்கு மத்திய தொழிற்ச ங்கங்கள் தங்கள் வணக்கத்தைத் தெரிவிக்கின்றன. மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவும் (NCCOEEE) அதே நாளில் முழு பலத்துடனும் உறுதியுடனும் தனது துறைசார் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் 2025 டிசம்பர் 23 அன்று நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்த முடிவு செய்தன. 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி  மாதங்களில் மின்சார ஊழியர்கள் மற்றும் நுகர்வோருடன் கூட்டுக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும். ஜனவரி 16 முதல்   தொடர் போராட்டங்கள் விதை சட்டமுன்வடிவு, மின்சார (திருத்த) சட்டமுன்வடிவு, விக்சித் பாரத் ஜி ராம்  ஜி சட்டத்திற்கு எதிராகவும் பிற கோரிக்கை களை முன்வைத்தும் 2026  ஜனவரி 16 அன்று கிராம மற்றும் வட்டார அளவில் எதிர்ப்புத் தினத்தைக் கடைப்பிடிக்க சம்யுக்த கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையில் மத்திய தொழிற்சங்கங் களும் முழு பலத்துடன் பங்கேற்கும். 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்தத் தொகுப்பு சட்டங்களைச் சுற்றி ஒரு நேர்மறையான ஒருமித்த கருத்தை உருவாக்க  அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கை களிலும் ஈடுபட்டுள்ளது. இதற்குத் தனக்கு வாலாட்டும் ஊடகங்கள் மற்றும் பொதுத்துறை நிர்வாகங்களைப் பயன்படுத்த  முயற்சிக்கிறது. ஆயினும் இவற்றை எதிர்த்துநின்று தொழிலாளர் தொகுப்பு சட்டங்களைக் கிழித்தெறிய தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். மோடி அரசை எச்சரிக்கும்  பிப். 12 - வேலைநிறுத்தம்  மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம், 2026 பிப்ரவரி 12 அன்று “ஒரு நாள் வேலைநிறுத்தத்தைக்” கடைப்பிடிப்பதன் மூலம் மோடி அரசாங்கத்திற்கு ஒரு வலுவான  செய்தியை வழங்க முடிவு செய்துள்ளன. வேலைநிறுத்தத்திற்கான தேதி முறையாக உறுதிப்படுத்தப்படும், மேலும் ஒரு விரிவான செயல் திட்டம் 2026 ஜனவரி 9 அன்று புதுதில்லியில் உள்ள ஹர்கிஷன்சிங் சுர்ஜித் பவனில் மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் தேசிய தொழிலாளர் மாநாட்டில் தயாரிக்கப்படும். மத்திய தொழிற்சங்கங்கள், முழு உழைக்கும் வர்க்கத்தையும் மற்றும் உழைக்கும் மக்களின் பிற பிரிவினரையும் வரவிருக்கும் பொது வேலைநிறுத்தத்திற்குத் தயாராகுமாறும், பரவலாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்குமாறும், மேலும் தங்கள்  அமைப்புகளை ஒரு தீவிரமான போராட்டத்திற்குத் தயார்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றன. உழைக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றவும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கவும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் மற்றும் மக்களின் பல்வேறு பிரிவினரையும், குறிப்பாக இளைஞர்களையும் மாணவர்களையும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகவும் ஒற்றுமையுடனும் முன்வருமாறு அறைகூவி அழைக்கிறோம். இவ்வாறு மத்தியத் தொழிற் சங்கங்கள் அறிக்கையில் கோரியுள்ளன.  (ந.நி.)