tamilnadu

கருத்துக் கூற பிப்.28 வரை அவகாசம்

யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் கள் மற்றும் கல்விப் பணியா ளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர் வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளைப் பரா மரிப்பதற்கான நடவடிக்கைகள்) விதி முறைகள் ஜனவரி 6ஆம் தேதி யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. பிப்ரவரி 5ஆம் தேதியை கடைசி தேதி யாகக் கொண்டு பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைக் கோரியது.

இந்நிலையில், வரைவு யுஜிசி விதி முறைகள் பற்றிய கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க பங்குதாரர்களிடமிருந்து பெறப் பட்ட கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு யுஜிசி இப்போது கடைசி தேதி யை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. பங்குதாரர்கள் வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துக் களை 28/02/2025 வரை பின்வரும் மின் னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கலாம்: draft-regulations@ugc.gov.in.