நாகர்கோவில், திருநெல்வேலி, ஜூன் 26- சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இருவரை யும் அடித்து கொலை செய்த காவல்துறையினரை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாளை சித்த மருத்துவ கல்லூரி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எம்.சுடலைராஜ், பாளை தாலுகா செயலாளர் வர குணன் மற்றும் வண்ணமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். வியாழனன்று டவுன் வாகைய டிமுக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தார்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் காவல்நி லைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுந்தர லிங்கம் என்பவர் மேக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை திட்டமிட்டு ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் சில வார ங்கள் கழிந்த நிலையில் கர்ப்பம் தரித்த அப்பெ ண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அப்பெண்ணின் சம்மதம் இன்றி கருக்கலைப்பு செய்துள்ளார். இக்குற்ற சம்பவத்தில் ஈடு பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இருவரையும் அடித்து கொலை செய்த காவல்துறையினரை கண்டித்தும், நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வடசேரி அண்ணா சிலை சந்திப்பு, தக்கலை, கருங்கல், குலசேகரம், இறச்சகுளம், காப்புக்காடு உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகி த்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முரு கேசன், எம்.அகமது உசேன், என்.உஷாபாசி, வட்டார செயலாளர் மோகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அண்ணா துரை, எஸ்.சி.ஸ்டாலின் தாஸ் உட்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டகுழு உறுப்பினர்கள், வட்டார செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம்
மார்த்தாண்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு வட்டார செயலாளர் அனந்தசேகர் தலைமை வகித்தார். மோகன்குமார், அப்புகுட்டன் பிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பார்வதிபுரம்
பார்வதிபுரம் பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறு ப்பினர்கள் என்.முருகேசன், என்.எஸ்.கண்ணன், என்.உஷாபாசி, மாவட்ட குழு உறுப்பினர் என். ரெகுபதி, வட்டாரச் செயலாளர் எஸ்.டி.ராஜ்கு மார், வட்டாரக் குழு உறுப்பினர் குமரேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
கடையடைப்பு
வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஒருநாள் அடையாள கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கபட்டது. அதன் ஒரு பகுதியாக தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம், குலசேகரம் உட்பட பல பகுதிகளில் இருவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தபட்டது. மேலும், குமரி மாவட்டம் முழுவதும் 90 சதவீதம் கடை கள் அடைக்கபட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளிக் கப்பட்டது.