tamilnadu

img

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், விவ சாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் செல்ல துரை பேசுகையில், எடை மோசடியை  தடுக்க எடைமேடைகளை அலுவ லர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு வேளாண்மை கல்லூரி மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி கொண்டுவர, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரைக்க வேண்டும் என வும், வேப்பூரில் காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் எனவும்  கேட்டுக் கொண்டார். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட துறை  அலுவலர்கள் உடனுக்குடன் பதில்  அளிக்க அறிவுறுத்தினார். விவசாயி களின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  அனைத்துத் துறை அலுவலர்களும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் விளக்கம் அளித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல் வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.