tamilnadu

img

வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜன.21- இராமநாதபுரம் மாவட் டம் கடலாடி வட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும், பயிர் காப்பீ டும் வழங்கக் கோரி தமிழ் நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகணன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு துவக்கி வைத்தார். இதில் மாவட்ட துணைச்  செயலாளர் டி.நவநீத கிருஷ்ணன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செய லாளர் கே.கணேசன், சிபிஎம் தாலுகா செயலாளர்கள் எஸ். தங்கச்சாமி, எஸ்.ராமசாமி, முருகேசன், சிஐடியு உள்  ளாட்சி சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பிரான்சிஸ், விவ சாயிகள் சங்க கடலாடி மேற்கு தாலுகா செயலாளர் எஸ்.சிவன்பெருமாள், தாலுகா தலைவர் எஸ்.இரு ளப்பதாஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநில துணைத் தலை வர் த.கண்ணன் நிறைவுரை யாற்றினார். பின்னர், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலாடி சமூக நலத்துறை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.