tamilnadu

img

குடிநீர் வசதி கேட்டு தோகைமலையில் விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

குடிநீர் வசதி கேட்டு தோகைமலையில்  விவசாயிகள் சங்கம் காத்திருப்பு போராட்டம்

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தோகைமலை ஊராட்சியில் உள்ள வெள்ளப்பட்டி, சேர்வேர்காரன் பண்ணை, அண்ணா நகர் ஆகிய கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் கேட்டு பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கியும் எந்த பயனும் இல்லை. இதனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தோகைமலை ஒன்றிய குழு சார்பில்  தோகைமலை பெட்ரோல் பங்க் எதிரே இருந்து ஊர்வலமாகச் சென்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர்  கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல், மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ. சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முனியப்பன், மற்றும் வெள்ளப்பட்டி கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய குழு உறுப்பினர் பெருமாள் நன்றி கூறினார். போராட்டத்தைத் தொடர்ந்து தோகைமலை காவல்துறையினர், பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். ஊராட்சி ஒன்றிய மேலாளர் தலைமையில் நடைபெற்ற  பேச்சு வார்த்தையில், ஊராட்சி செயலர், டேங்க் ஆபரேட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மே 13 ஆம் தேதி காலை முதல் வெள்ளப்பட்டி மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.