tamilnadu

img

தனித் தீவில் புதுப்பயணம் - யேமாமா

நீலக்கடல் நடுவே நெடுந்தொலைவில் ஒரு அழகான தீவு இருக்கிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்திருக்கிற, குளிர்ச்சியான காற்று தழுவியிருக்கிற அந்தத் தீவில் சில காலம் முன்பு வரையில் வீடுகள் மிக எளிமையாக, நவீன வசதிகள் எதுவுமற்றவையாக இருந்தன. மக்களின் வாழ்க்கை பழைய வழியிலேயே இருந்தது. அவர்கள் எந்தப் புதுமையும் இல்லாமல், எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியாகவே ஒவ்வொரு நாளையும் கடந்தார்கள்.

காலையில் கண்விழிப்பது, உணவு சமைப்  பது, சாப்பிடுவது, சிறு சிறு வேலைகளைச் செய்  வது, எதற்காகவாவது சண்டை போட்டு ஒரு வரையொருவர் அடிப்பது, மாலையில் மறுபடி யும் சமைப்பது, உண்பது இரவில் உறங்கு வது… இப்படித்தான் அவர்களின் தினசரி வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. தீவுக்கு  வெளியே உலகத்தில் ஏற்பட்டிருக்கும் முன் னேற்றங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரிய வில்லை. தங்கள் வாழ்க்கை இப்படி மாற்ற மில்லாமல் இருக்கிறதே என்ற உணர்வு கூட  அவர்களுக்கு இல்லை. சில புதிய பொருட் களை வெளி உலகத்தினர் வழங்கினாலும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசைகூட அவர்களிடம் இல்லை. இதையறிந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கார ணத்தைக் கண்டுபிடிப்பதற்காக அந்தத் தீவிற்கு வந்தார். அவர் பல நாட்கள் பொறுமை யாக அந்த மக்களோடு பேசிப்பார்த்தார். அவர்களின் அன்றாடச் செயல்களை உற்றுக் கவனித்தார். அந்த மக்களிள் பாரம்பரியக் கதை களைக் கேட்டு ஆராய நினைத்தார். ஆனால்  அப்படிப்பட்ட கதைகள் எதுவும் கிடைக்க வில்லை. அவர்கள் தங்களின் வீடுகளிலோ,  மரத்தடியிலோ உட்கார்ந்து பேசும்போது, கதையே சொல்வதில்லை என்று கண்டு பிடித்தார். ஏன் கதை சொல்வதில்லை என்றால்,  அவர்களிடம் கற்பனைகளே இல்லை என்ற வியப்பூட்டும் உண்மையையும் அவர் கண்ட றிந்தார்.

தீவின் இந்தப் புதிரான வாழ்க்கை பற்றி  உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார் ஆராய்ச்சியாளர். அதைத் தொடர்ந்து தீவு மக்கள் மீது கனிவும் அக்கறையும் கொண்ட ஒரு குழு அங்கே வுந்து இறங்கியது. அந்த  குழுவில் கதை எழுத்தாளர்கள், கதை சொல்லி கள், நடிப்புக் கலைஞர்கள், பாடகர்கள் என்று  பலர் இருந்தனர். குழுவினர் அந்த மக்களுடன் அன்பாகச் சேர்ந்து பழகினார்கள். ஒருமாலை, அந்தக் குழுவினர் தீவின் குழந்தைகளைக் கூட்டி, ஒரு பெரியமரத்தின் கீழ் அமர்ந்தார்கள். அவர்கள் சுவையான கதைகளைச் சொல்லத் தொடங்கினார்கள். அந்தக் கதைகளில் உயரமான கோபுரங்கள், ஆழமான நதிகளைக் கடக்கும் பாலங்கள், எஙகும் விரைந்து செல்லும வாகனங்கள், கட லைத் தாண்டும் கப்பல்கள், மற்ற கோள் களுக்குச் செல்லும் வானூர்திகள், சுவை யான புதுவகை உணவுகள், மனதைமயக்கும் பாடல்கள், ஆடவைக்கும் இசை என்றெல்லாம்  வந்தன. சாகசங்களைச் செய்யும் மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் பூமியிலிருந்து நிலா வுக்குப் போய் விட்டுவந்தார்கள். தீவின் பல இடங்களில் நடிப்புக் கலை ஞர்கள் அந்தக் கதைகளையே சுவையான நாடகங்களாக நடத்திக் காட்டினார்கள். கடின மான பணிகளைக்கூட எளிதாகச் செய்ய உத வும் கருவிகளை நாடகத்தில் செயல்படுத்திக் காட்டினார்கள். அவற்றைக் கண்ட மக்கள் பரவசமடைந்தார்கள். பாடகர்கள் ராகம் போட்  டுப்பாடி, பாட்டிலேயே கதை சொன்னார்கள். குழந்தைகளோடு பெரியவர்களும் உட்கார்ந்து கதைகளைக் கேட்கத் தொடங்கி னார்கள். மெல்ல மெல்லப் பலவகையான கதைகளுக்குக் காதுகொடுத்தனர். குழந்தை கள் கதைகளில் மூழ்கினார்கள். கதைகளில் இருந்த கற்பனை உலகம் மெல்ல அவர்களது  உள்ளத்தில் ஊறியது.

கதைகளைக் கேட்ட, பாடல்களைச் சுவைத்த, நாடகங்களை ரசித்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கினார்கள். அந்தக் கற்பனை கள் அவர்களுக்குப் புதிதாகக் கனவுகளைக் கொண்டு வந்தன. “நாம் ஏன் இப்படியே மாற்ற மில்லாமல் வாழ வேண்டும்? நாமும் இப்ப டிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும்” என்ற  எண்ணம் அவர்களிடம் உதயமானது. குழந்தை கள் தங்கள் நட்புகளுக்குத் தாங்களே கற்பனை  செய்த கதைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். பெரியவர்களும் தங்கள் குடும்பத்தினருக்கும் சகமனிதர்களுக்கும் கதை சொன்னார்கள். புதிய புதிய யோசனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். நாட்கள் கடந்தன. அற்புதமான மாற்றங் கள் நிகழத் தொடங்கின. தேக்கமடைந்து போன  பழைய வழிமுறைகள் மறைந்தன. கற்ப னைச் சிறகுகளை விரித்த மக்கள் கனவு களை நனவாக்குவதை நோக்கிக் கடினமாக  உழைத்தார்கள். அன்பின் அருமையை உணர்ந்தார்கள். சண்டைகளைக் கைவிட்டார் கள். இப்போது அந்தத் தீவின் மக்கள் முன்னேறிய, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை யறிந்து, அவர்களுக்குக் கதைகளையும் கற்ப னைகளையும் கொண்டு போன குழுவினர் மன நிறைவோடு அதேபோன்ற வேறுதீவுகள் இருக்  கின்றனவா என்று விசாரித்துக் கொண்டிருக்கி றார்கள்.