மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு?
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் பாஜகவின் தூண்டுதலால் குக்கி - மெய்டெய் சமூகத்துக்கு இடையே வன் முறை வெடித்தது. இந்த வன்முறையால் பாஜக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான அஜய் பல்லா மணிப்பூர் ஆளுநராக உள்ள நிலையில், அவர் குடியரசுத் தலைவர் ஆட்சியை கவனித்து வருகிறார். குடியரசுத் தலை வர் ஆட்சி அமல்படுத்திய பொழுதிலும் மணிப்பூரில் இன்னும் வன்முறை இல்லாத நாட்களே இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடையும் சூழலில், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய தற்போது வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இத னால் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மணிப்பூரில் குடியர சுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.