tamilnadu

img

கரும் பூஞ்சானம் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த விளக்கம்

கரும் பூஞ்சானம் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த விளக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் துவரங்குறிச்சி, கள்ளிக்காடு கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.  அப்போது, விவசாயி ரகுபதி என்பவர் வயலில் விவசாயிகளுக்கு, வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் விளக்கமாக பயிற்சி அளித்தனர். இதில் கருவாடு பொறி, உழவர் செயலி, தேமோர் கரைசல் , பப்பாளி இலை கரைசல் பயிர்களில் கரும்பூஞ்சானம் மேலாண்மை போன்ற வேளாண் தொழில்நுட்கள் குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில், அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், வேளாண் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.  அதனைத் தொடர்ந்து, கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் குழு தலைவர் ராமசந்திரன் மற்றும் விஷ்ணு பிரசாத் ஊர் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.